சிவகார்த்திகேயன் நடிப்பில், ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள அமரன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முனனணி நடிகராக உயாந்தவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்த மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது தயாரிப்பு நடிப்ப என பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து அமரன் படம் தயராகியுள்ளது.
இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, புவன் அரோரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அமரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன் படம் இன்று (அக்டோபா 31) வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், படத்திற்கு பாராட்டு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“