Advertisment

பொங்கல் வின்னரா அயலான்? முதல்நாள் வசூல் நிலவரம் என்ன?

அயலான் வட மாநிலங்களில் அயலான் வசூல் குறைந்துள்ள நிலையில், பாசிட்டீவ் விமர்சனங்கள் காரணமாக வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Ayalaan Movie

அயலான் படம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து வெளியாகியுள்ள இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் ஆகிய படங்களுடன் அருண் விஜய் நடித்துள்ள மிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் தெலுங்கில், மகேஷ்பாபு நடிப்பில் குண்டூர் காரம், வெங்கடேஷ் நடிப்பில் சைந்தவ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சைன்ஸ் பிக்ஷன் படமாக வெளியாகியுள்ள அயலான் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் ஏலியன் கேரக்டர் குழந்தைகளை கவரும் என்பதால் தான்.

அந்த வகையில் அயலான் படம் வெளியான முதல் நாளில், ரூ4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, புதுச்சேரி, கோவை. மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அயலான் படம் நல்ல வசூலை குறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் வட மாநிலங்களில் அயலான் வசூல் குறைந்துள்ள நிலையில், பாசிட்டீவ் விமர்சனங்கள் காரணமாக வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment