அன்பு காட்டும் ஏலியன்... அரவணைக்கும் நாயகன் : ரசிகர்களை கவர்ந்ததா அயலான்?

6 வருட கடும் போராட்டங்களையும், தடைகளையும் தகர்த்து இந்த பொங்கலுக்கு வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா?

6 வருட கடும் போராட்டங்களையும், தடைகளையும் தகர்த்து இந்த பொங்கலுக்கு வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா?

author-image
WebDesk
New Update
Ayalaan Movie
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் "அயலான்" திரைபடத்தின் முழு விமர்சனத்தை இங்கே காணலாம்

Advertisment

கதைக்களம் :

வேற்றுகிரகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக சிதறிய அதிசக்திவாய்ந்த கல் ஒன்று பூமியில் விழுகிறது. அந்தக் கல் வில்லனிடன் சிக்க, அதைவைத்து நச்சு வாயுவை கசியவிட்டு மக்களை அழிக்க திட்டமிடுகிறான் வில்லன். அந்த கல்லை தேடி பூமிக்கு ஒரு ஏலியன் வருகிறது. ஏலியன் நாயகன் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அந்த கல்லை தன் கிரகத்திற்கு எடுத்துச் சென்று பூமியை காப்பாற்றியதா? இல்லையா? என்பதே கதை

சிவகார்த்திகேயன் :

Advertisment
Advertisements

பல முன்னணி நடிகர்கள் நடிக்க தயங்கும் ஒரு புது முயற்சியை கையில் எடுத்து, பல தடைகளுக்குப் பிறகு மக்களிடையே படத்தை கொண்டு சேர்த்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பாராட்டுக்கள். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட், நடனம் என எல்லா ஏரியாவிலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை மீண்டும் ஒரு முறை கவர்ந்திருக்கிறார். அவரும் ஏலியனும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அவரின் எதார்த்த நடிப்பு ஒரு முன்னணி நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவராக சிவகார்த்திகேயனை நினைக்க வைக்கிறது

துணை நடிகர்களின் நடிப்பு :

யோகிபாபுவின் காமெடி காட்சிகள் கலகலப்பு. ஏலியன், SK, யோகி பாபு, கருணாகரன் கூட்டணியில் வரும் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடி. ரகுல் பிரீத் சிங் அளவான நடிப்பில் அசத்தி இருக்கிறார். ஏலியனுக்கு குரல் கொடுத்திருக்கும் சித்தார்த்தின் வாய்ஸ் படத்திற்கு பெரிய பிளஸ்.

இயக்கம் மற்றும் இசை

"இன்று நேற்று நாளை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ரவிக்குமார், கிட்டத்தட்ட 6 வருட இடைவெளிக்கு பிறகு அயலானை மக்களுக்கு கொடுத்திருக்கிறார். அவரின் வித்தியாசமான கதையில் Fantasy காட்சிகளை புகுத்தி  ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பும் ,அதேசமயம் எதார்த்தம் மாறாத திரைக்கதையும் கொடுத்து ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறார்  ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்த நிலையில் கலர்ஃபுல்லான காட்சிகளோடு பார்ப்பதற்கு புது அனுபவத்தை கொடுக்கிறது. மிரட்டலான பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

படம் எப்படி :

படத்தின் ஆரம்பக் காட்சியே இது ஒரு வித்தியாசமான படம் என்பதை ரசிகர்களுக்கு புரிய வைக்கிறது. அன்பு காட்டும் ஏலியன், அரவணைக்கும் நாயகன், இவர்கள் செய்யும் கலாட்டா, மிரட்டல் வில்லனின் திட்டம் என முதல் பாதி முழுவதும் கலகலப்பு பரபரப்பு நிறைந்ததாக முடிகிறது. நாயகனும் ஏலியனும் ஒன்று சேர்ந்து எப்படி வில்லனின் திட்டத்தை படிப்படியாக முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்சன் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளுடன் படம் முடிகிறது. கதைக்குள் நுழைவதற்கு சிறிது நேரம் இயக்குனர் எடுத்துக் கொண்டாலும், ஏலியன் பூமிக்கு வந்த பிறகு படம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் இதையெல்லாம் பெரிதாக எடுத்த கொள்ள முடியவில்லை. படத்தின் இறுதி காட்சியில் வரும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது. ஹாலிவுட் படங்களை பார்த்து வியந்த நம் ரசிகர்களுக்கு தமிழிலும் இதுபோன்ற படைப்புகளை கொடுக்க முடியும் என்பதை இந்த கூட்டணி நிரூபித்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் காட்சிகள் தமிழ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திருக்கிறது

6 வருட கடும் போராட்டங்களையும், தடைகளையும் தகர்த்து இந்த பொங்கலுக்கு குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கொண்டாட கூடிய படமாக அயலான் வென்றிருக்கிறது.

நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: