ஏலியன் கூட்டணியில் வெற்றி பெற்றாரா சிவகார்த்திகேயன்? அயலான் டவிட்டர் விமர்சனம்

சிவகாத்திகேயன் நடிப்பில் சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

சிவகாத்திகேயன் நடிப்பில் சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ayalaan

சிவகார்த்திகேயன் - அயலான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் அயலான். சையின்ஸ் பிக்ஷன் ஏலியன் படமாக இந்த படத்தை ராம்குமார் இயக்கியுள்ள நிலையில், சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், ஏலியனாக வரும் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருந்தார்.

Advertisment

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அயலான் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையிலும் , படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அயலான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குழந்தைகள் ரசிக்கும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று இந்த படத்தின் டிரெய்லர் மூலம் உறுதியான நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் ஒரு வேதனையான கதை இருக்கும்.. ஒவ்வொரு வலி நிறைந்த கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு.. வலியை ஏற்று வெற்றிக்கு தயாராகுங்கள்!!! உங்களுக்கு அருகிலுள்ள பெரிய திரைகளில் எங்கள் அயலான். இந்த பொங்கலுக்கு உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த பொழுதுபோக்கு அனுபவத்தை அனுபவிக்கவும் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: