Tamil Movie Don Box Office Collection Update In tamil : சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டான் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகரான உயர்ந்த சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் டான். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கிய இந்த படத்தில், பிரியங்கா மோகன் நாயகியாகவும், எஸ்ஜே சூர்யா, ராதாரவி. சூரி பால சரவணன், முனிஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனத்துடன சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. படத்தின் வசூல் இரண்டாவது வாரத்தில் வேறு எந்த பெரிய படங்களும் வெளியாகாத நிலையில், வரும் வாரங்களில் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி இருந்தாலும் டான் படத்தின் வசூலுக்கு எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் டான் படம் உலகளவில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயனின் கடைசிப் படமான டாக்டர் கடந்த ஆண்டு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை வசதியின் கீழ் 25 நாட்களில் ரூ 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியது.
‘ @Siva_Kartikeyan‘s #DON nears ₹70 crore gross globally post its opening week.
— Cinetrak (@Cinetrak) May 20, 2022
Stay tuned for the detailed report! pic.twitter.com/dL4IT80jIM
ஆனால் தற்போது டான் இரண்டாவது வார இறுதியில் இந்த மைல்கல்லை கடக்க வாய்ப்புள்ளது. இப்படம் தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“