Advertisment

பொன் சிலையாக மாறிய சிவகார்த்திகேயன்... மாவீரன் தயாரிப்பு நிறுவனம் அசத்தல்

சிவகார்த்திகேயன் கைகளை பயன்படுத்தி அவர் கொடுத்த ஒரு போஸ் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாகி வருவது வருகிறது.

author-image
WebDesk
New Update
Maaveera sivakarthikeyan

மாவீரன் சிவகார்த்திகேயன் பொன் நிற சிலை

சிவகார்த்திகேயனின் "மாவீரன்" திரைப்படம் நேற்று உலகம் முழுவதும்  பிரம்மாண்டமாக வெளியாகி விமர்சன ரீதியாக அனைவரது பாராட்டுகளையும்,வசூல் ரீதியாக பல சாதனைகளையும் குவித்து வருகிறது. மேலும் இதுவரை வந்த சிவகார்த்திகேயன் படங்களிலேயே "தி பெஸ்ட்"என்று சொல்லும் அளவிற்கு படம் சிறப்பாக இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகினறனர்.

Advertisment

இதன் காரணமாக சிவகார்த்திகேயனும் படக்குழுவினரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஸ்டைலும், லுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிகவும் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக கைகளை பயன்படுத்தி அவர் கொடுத்த ஒரு போஸ் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாகி வருவது வருகிறது. பலரும் அதனை ரீ கிரியேட் செய்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

maaveeran Statue

மாவீரன் பொன் சிலை

மேலும் இந்த போஸை பிரமோட் செய்யும் விதமாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ், சிலை என்ற நிறுவனத்துடன் சேர்ந்து அந்த போஸை பொன் நிற சிலை வடிவில்  வடிவமைத்துள்ளனர். இது மக்களிடையே தற்போது பிரபலமாக மாறி இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் பெருமளவில் ரசித்து இச்சிலைகளை வாங்கி வருவதால், மாவீரன் படத்தின் வெற்றியுடன் சேர்த்து இதனையும் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siva Karthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment