சிவாஜி, கருணாநிதி கூட்டணி: 72 ஆண்டுகள் பழைய மெகாஹிட் டைட்டிலை பிடித்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்கு, பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளநிலையில், படத்தின் டிசர் தற்போது வெளியாகியுள்ளது.
அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தள்ள சிவகார்த்திகேயன், சமீபத்தில், வெளியான அமரன் படத்தில் ராணுவ மேஜராக நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கததில் வெளியான இந்த படம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. சாய் பல்லவி இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அமரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக மாறிய நிலையில், ரூ300 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ரவி மோகன் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அதர்வா முரளி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டிசர் இன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், அதர்வா இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்க, ரவி மோகன், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் நடிக்க பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும், சிவாஜி கணேசன் முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான படம் பராசக்தி. 1952-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர்.
Advertisment
Advertisement
மேலும் படத்திற்கு வசனம் எழுதியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தனது வசனத்தை ஆழமாக பதித்த இவர், சிவாஜிக்கு முதல் படமே பெரிய வெற்றிப்படமாக ஆகும் அளவுக்கு வசனத்தில் முத்திரை பதித்திருந்தார். சிவாஜி மட்டுமல்லாமல், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கண்ணதாசன், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இந்த படத்தில் அறிமுக நடிகராகளாக முத்திரை பதித்திருந்தனர். தமிழ் சினிமாவில் பராசக்தி ஒரு பெரிய வெற்றிப்படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
தற்போது 72 வருடங்களுக்கு பிறகு, இந்த படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் கைப்பற்றியுள்ளார். இந்த டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.