வெங்கட் பிரபு – நாக சைதன்யா படத்தின் புதிய அப்டேட்
மன்மத லீலை படத்திற்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தற்காலிகமாக இந்த பட்திற்கு ஆர்.சி.22 என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்திஷெட்டி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முக்கியமான காட்சிகள் மைசூரை சுற்றி அழகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் இசையமைப்பாளர் என பிஸியாக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் த்ரில்லர் பாணியில் உருவாகியள்ள படம் 13. இயக்குனர் கவுதம மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகில் அழகிய பெண்கள் : டாப் 10-ல் இடம் பெற்ற இந்திய நடிகை
லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் ஜூலியன் டிசில்வா வெளியிட்டுள்ள உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில, ஹாலிவுட் நடிகை ஜோ காமுர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 91.22 சதவீத புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
பான் இந்தியா படத்திற்கு தயாராகும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான பிரின்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கிய இந்த படம் தமிழ் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதில் சமூக வலைதளம் வழியாக மலையாள இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பீர்களா என்று ரசிகர்கள் ஒருவர் கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், கண்டிப்பாக எல்லா மொழி இயக்குனர்களுடன் பணியாற்றுவேன். பலரையும் சந்தித்து பேசி வருகிறேன். எல்லோரும் பல ஐடியாக்களுடன் வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வரும் நிலையில், தற்போது அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் டாப்லே சச்மோன் இயக்கும் தி இ என்ற சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாவும், தி லாஸ்ட் கிங்டம் என்ற படத்தில் நாயகன் இதில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“