Advertisment

பீஸ்ட் செட்டில் விஜயுடன் சந்திப்பு... பேசியது என்ன? மனம் திறந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
Vijay Sk

விஜய் - சிவகார்த்திகேயன்

அயலான் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பீஸ்ட் செட்டில் நடிகர் விஜய்யை சந்தித்து குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த சிவகார்த்தியேன் நடிப்பில், கடைசியாக வெளியான படம் மாவீரன். கலவையாக விமர்சனங்களை பெற்ற இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திப்படுத்திய நிலையில், அடுத்ததாக இவர் நடிப்பில் அயலான் என்ற படம் வெளியான உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கிறது.

இதனிடையே இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் முடிந்து வரும் பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அயலான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இறங்கியுள்ள சிவகார்த்திகேயன், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில், பிஹைண்ட்வுட்டிற்கு அளித்த பேட்டியில், 'பீஸ்ட்' செட்டில் விஜய்யை சந்தித்தது குறித்து மனம் திறந்து பேசினார். விஜயின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்த அதே ஃபிலிம் சிட்டியில் தனது திரைப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் செட்டுகளுக்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மேலும் 'பீஸ்ட்' படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதால், இந்த சந்திப்பு எளிதாக நடந்தது. இந்த சந்திப்பின்போது நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பாராட்டியுள்ள விஜய். அதே போல் சர்கார் பட சேரத்திலும் சிவகார்த்திகேயன் விஜய்யை சந்தித்ததாகவும், அந்த நேரத்தில் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்க்கு பிடித்த நடிகரின் தனது படங்களை படங்களை பட்டியலிட்ட சிவகார்த்திகேயன்,'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' மற்றும் 'டாக்டர்' ஆகியவை ரசிகர்களுக்கும் பிடித்த படங்கள் என்று கூறியுள்ளார்.

ரவிக்குமார் இயக்கிய 'அயலான்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நகைச்சுவையான வேற்றுகிரகவாசி நடித்துள்ளார். மேலும் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. படத்தைப் பற்றிய வழக்கமான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan Thalapathy Vijay Beastmode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment