போட்டிக்கு வந்த விஜயகுமார்; பல்லை பறிகொடுத்து பட வாய்ப்பு பெற்ற சிவக்குமார்: இந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா?

பட வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக சிவக்குமார் - விஜயகுமார் இருவரும் முயற்சித்தபோது தனது பல்லை பறிகொடுத்து வாய்ப்பை பெற்றுள்ளார் சிவக்குமார்.

பட வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக சிவக்குமார் - விஜயகுமார் இருவரும் முயற்சித்தபோது தனது பல்லை பறிகொடுத்து வாய்ப்பை பெற்றுள்ளார் சிவக்குமார்.

author-image
WebDesk
New Update
Vijayakumar Sivakumar

விஜயகுமார் - சிவக்குமார்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக ஓவியர், எழுத்தாளர் இலக்கிய பேச்சாளர் என பன்முக திறமை கொண்ட சிவக்குமார் ஆரம்பத்தில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது பல்லையே இழந்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது.அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்த சிவக்குமாருக்கு 5-வது படமாக அமைந்தது கந்தன் கருணை.

இந்த படத்தில் ஜெயலலிதா கே.ஆர்,விஜயா ஆகியோருடன் சிவக்குமார் நடித்திருந்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கிய இந்த படத்தில் முருகன் வேடத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடப்பதை தெரிந்துகொண்ட சிவக்குமார் அங்கு சென்றுள்ளார். அதே முருகன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கேட்டு, நடிகர் விஜயகுமாரும் அங்கு வர இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் சிவக்குமாருக்கு முருகன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளனர். இதில் சிவக்குமாருக்கு முருகன் வேடத்தில் மேக்கப் போட்டு டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று சிலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

அதன்பிறகு சிவக்குமாரிடம் நான் சொல்லி அனுப்புகிறேன் என்று படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகு அவரிடம் இருந்து சிவக்குமாருக்கு எந்த தகவலும் வரவில்லை. இதற்கிடையில் சிவக்குமாரை சந்தித்த நடிகர் அசோகன் நீதான் முருகன் வேடத்தில் நடிக்க இருக்கிறாய் என்று கூறியுள்ளார். உன்னை தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட சிவக்குமார் நீங்கள் தான் சொல்றீங்க. ஆனா எனக்கு இன்னும் எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளார் சிவக்குமார்.

Advertisment
Advertisements

அப்போதுதான் முருகன் வேடத்திற்கு சிவக்குமாரை தேர்வு செய்வதில் ஏ.பி.நாகராஜனுக்கு சிறு தயக்கம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிவக்குமாரிடம் கூறிய அப்படத்தின் தயாரிப்பாளர், நீங்கள் அழகா இருக்கீங்க, நல்ல வசனம் பேசி நடிக்கிறீங்க, ஆனா, உங்களின் சிங்கப்பல் தான் நீங்கள் இந்த கேரக்டரில் நடிக்க தடையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட சிவக்குமார், உடனடியாக அந்த பல்லை எடுத்துவிட்டு, இயக்குனர் ஏ.பி.நாகராஜன் முன்பு நின்றுள்ளார்.

நீங்கள் சொன்ன மறுநாளே நான் அந்த பல்லை எடுத்துவிட்டேன் என்று சிவக்குமார் சொல்ல, அடுத்த நொடியே நீதான்யா முருகன் என்று சொன்னார் ஏ.பி.நாகராஜன். இப்படித்தான் கந்தன் கருணை படத்தில் சிவக்குமார் நடித்திருந்தார். சமீபத்திய ஒரு நேர்காணலில் சிவக்குமார் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

Actor Sivakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: