Advertisment

திருமணம் ஆன பிறகும் கிரேஸ் குறையல... இந்த புன்னகை அரசியை தெரிகிறதா?

ஒரு சில நடிகைகள் தங்களின் தற்போதைய புகைப்படங்கள் மட்டுமல்லாமல் தனது சிறுவயது மற்றும் பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Sneha12

பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம்

இணையதள வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கடத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை சமூகவலைதளங்கில் வெளியிட்டு வருகின்றனர். சினிமா மற்றும் சின்னத்திரையை விட அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisment

இதன் காரணமாக சினிமா நட்சத்திரங்களின் சமூகவலைதள பக்கங்களில் அவர்களை ஃபாலோ பண்ணும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் வெளியிடும் பதிவுகளும் வரவேற்பை பெற்று வருவது வழக்கம். இதில் ஒரு சில நடிகைகள் தங்களின் தற்போதைய புகைப்படங்கள் மட்டுமல்லாமல் தனது சிறுவயது மற்றும் பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று பெயரெடுத்த இவர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது திருமணமாகிவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் சமீபத்தில் இவர் படங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் நாள்தோறும் இவரை பற்றி ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Sneha12

அந்த நடிகை வேறு யாரும் இல்லை. நடிகை சினேகாதான். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பட்டாஸ் படத்தில் கடைசியாக நடித்திருந்த சினேகா அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sneha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment