திரைத்துறையில் நிலவும் பொது அமைதியை குலைக்க பெப்சி முயற்சி செய்வதாகவும், திரைத்துறை சிக்கல்களுக்கு பெப்சி நிர்வாகமே தீர்வு காண்பது போல் மாய தோற்றத்தை ஏற்படுத்துவதாக, நடிகர் சங்கம் பெப்சி நிர்வாகத்தின் அறிக்கைகளுக்க கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுக்காமல் இருக்கும் தனுஷ்க்கு ரெட் கார்டு விதிக்கப்படுவதாகவும், அவரை வைத்து படம் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள், தங்களின் ஆலோசனையை பெற்ற பிறகே தயாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனால் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் நடிகர் சங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திடம் நடிகர் சங்கம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து தனுஷ் மீதான தடை நீக்கப்படடது. அதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பாளர்கள் தன் மீது கொடுத்த புகாரை தீர்க்கவும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவரது படப்பிடிப்புகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்தது. இதனையடுத்து தற்போது தனுஷ் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனிடையெ தயாரிப்பாளர் சங்கத்தில் தனுஷ் மீதான தடை மற்றும் புகார் குறித்து விசாரிக்க கூட்டு குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக, பெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பெப்சி நிர்வாகத்தின் இந்த அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளது.
இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு, தனுஷ் படப்பிடிப்பும் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனுஷ் தொடர்பாக எந்தவித விவாதமும் இல்லாத நிலையில், நேற்று (17.09.2024) திடீரென, தனுஷ் தொடர்பாக விசாரிக்க ஒரு கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக ஃபெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது.
ஏனெனில், நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுந்தால், அதை பரஸ்பரம் பேசித் தீர்வு காணும் அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்கள் இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை உறுதிபட நினைவுபடுத்துகிறோம். மேலும், ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம் என்று கூறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.