எங்க பொழப்பு போகுது; நீங்க இங்க வராதீங்க, மெட்ராஸிலே வேலை பாருங்க: இசைஞானி பற்றி எஸ்.பி.பியிடம் சொன்ன இந்தி இசை கலைஞர்கள்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்தாலே இந்த பாடல் பெரிய வெற்றியாகிவிடும் என்பது பலரின் பேச்சு.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்தாலே இந்த பாடல் பெரிய வெற்றியாகிவிடும் என்பது பலரின் பேச்சு.

author-image
WebDesk
New Update
SPB Ilayar

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாள் இளையராஜாவும், முன்னணி பாடகர் எஸ்.பி.பியும் மும்பை சென்றிருந்தபோது அங்கிருந்த இசை கலைஞர்கள் தங்களை பற்றி என்ன சொன்னார்கள்? எப்படி பேசினார்கள் என்பது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியும் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள அவர், பல இளம் பாடகர்களையும் அறிமுகம் செய்துள்ளார். அதேபோல் இந்திய சினிமாவில் பல மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி முன்னணி பாடகராகவும் வலம் வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்தாலே இந்த பாடல் பெரிய வெற்றியாகிவிடும் என்பது பலரின் பேச்சு.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா குறித்து பேசிய எஸ்.பி.பி, நான் பார்த்ததுல, அவர் ரொம்ப பெரிய இசை அமைப்பாளர். அவர் சுயமாக வளர்ந்த ஒரு மனிதர். அவருக்கு வருஷத்துக்கு நூறு படம் இருக்கோ, அல்லது 4 படம் இருக்கோ, அவருக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவரோட டைம் டேபிள் ரொம்ப கச்சிதமா இருக்கும். ஏழு மணிக்கு, ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இருப்பார். கம்போஸிங் ஸ்டுடியோவில் இருப்பார். அவருக்கு ஓய்வே கிடையாது. 

படம் இல்லனா ஏதாவது எழுதிட்டே இருப்பார். அவர் ஒரு அருமையான கவிஞர், ரொம்ப அழகா எழுதுவார். எத்தனையோ பேரோட இன்ஃபுளூயன்ஸ்ல சினிமா துறைக்கு வந்தாலும், அவருக்குன்னு ஒரு தனி அடையாளம் இருக்கு. இந்தியாவுில் எங்க போனாலும், இளையராஜாவோட பேர் சொன்னா, எழுந்து நின்று நமஸ்காரம் சொல்ற அளவுக்கு அவருக்கு மரியாதை உண்டு. ஒரு உதாரணம் சொல்றேன். நாங்க ரெண்டு பேரும் மும்பையில் ஒரு பாட்டு ரெக்கார்டிங் போயிருந்தோம்.

Advertisment
Advertisements

அங்க மியூசிஷியன்ஸ் எல்லாம் உட்கார்ந்துட்டு, "ராஜா சாரை வரச் சொல்லுங்க," ன்னு கேட்டாங்க. "அவர் எல்லாம் வரமாட்டார்," ன்னு ஒருத்தர் சொன்னார். நான், "இல்லை, நான் அழைச்சிட்டு வரேன்" னு சொன்னேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த மியூசிஷியன்ஸ் என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா? "டேய், நீயும் அவனும் இங்க வந்து ரெக்கார்டிங் பண்ணாதீங்கடா. எங்களுக்குப் பொழப்பு போயிருச்சு. நாங்க ஜிங்கிள்ஸ் மாதிரி வாசிச்சு, தப்பு தண்டா எல்லாம் பண்ணி, நிறைய பணம் வாங்கிட்டு இருக்கோம். அந்த ஆள் வந்து கம்போஸ் பண்ணா, அதை வாசிக்க முடியாம செத்துட்டு இருக்கோம். எங்களால முடியல. நாங்க ஏதாவது தப்புன்னு சொன்னா அவரோட கோபத்துக்கு ஆளாகிடுவோம்" என்று சொன்னாங்க.

இசைக்கு அவர் ஒரு நடமாடும் அகராதி. நாங்க ஒரு சின்ன தவறு பண்ணினா கூட, அதை அவர் கண்டுபிடிக்காம விடமாட்டார். டேக்கை கட் பண்ணி, "அந்த அஞ்சாவது கம்பி டியூனிங்கை கொஞ்சம் பார்த்துக்கோங்க," என்று சொல்லுவார். "நீங்க வந்து ரெண்டு ஒத்திகை பார்த்துட்டு, 4-வது டேக்ல ஓகே பண்றீங்க. எங்களுக்கு ஓடி வராது. நீங்க மெட்ராஸ்லயே வேலை பாத்துக்கோங்கடா, இங்க வர வேண்டாம்," என்று சொன்னாங்க. அதுதான் இளையராஜா. அவரோட ஸ்கோர் ஷீட்ல ஒரு சின்ன திருத்தம்கூட இருக்காது. அவ்வளவு அழகா எழுதுவார்.

'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாட்டு ரெக்கார்டிங் பண்ணும் போது, அவர் நிறைய திருத்தங்கள் செய்தார். இன்ட்ரோ முடிஞ்சு பல்லவி வர்றதுக்கு முன்னாடி, அவரே ஆர்கெஸ்ட்ரா கண்டக்ட் பண்ணார். எல்லோரும் வாசிச்சு முடிச்சதும், ஒரு நிமிஷம் பிரமிச்சு நின்னாங்க. இளையராஜா மற்றும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இவங்க ரெண்டு பேரோட கூட்டணி தான், தமிழ் அல்லது தென்னிந்திய சினிமாவுல நடந்த மிகப் பெரிய இசை கூட்டணி என்று கூறியுள்ளார்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: