Advertisment

மீண்டும் பேயாக தமன்னா... மர்மத்தை உடைக்கும் சுந்தர்.சி : அரண்மனை 4 டிரெய்லர் சொல்வது என்ன?

சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ள அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamannah Aranmanai 4

அரண்மனை 4 படத்தில் தமன்னா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி திகில் பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் அரண்மனை சீரிஸ். இதுவரை 3 பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 4-வது பாகம் அடுத்து வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற சீரிஸ் படங்கள் முனி மற்றும் அரண்மனை படங்கள். இதில் முனி படத்தில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அரண்மனை படத்தில் 4-வது பாகம் தற்போது தயாராகியுள்ளது. அரண்மனை முதல் பாகத்தில் வினய் ஹன்சிகாலட்சுமிராய் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  

தொடர்ந்து, 2ம் பாகத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா ஆகியோரும் 3-வது பாகத்தில் ஆண்டரியா, ராஷி கண்ணா, ஆர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த அனைத்து பாகங்களிலும் இயக்குனர் சுந்தர்.சி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் தற்போது 4-வது பாகம் தயாராகியுள்ளது. சுந்தர்.சி வழக்கம்போல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி கமிட் ஆகி இருந்தார்.

ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை புகழ் சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் நடித்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே அரண்மனை 4 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தள்ளிப்போன இந்த படம் தற்போது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தற்போது அரண்மனை 4-வது பாகத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான சஸ்பென்சுடன் தொடங்கும் இந்த டிரெய்லரில் ஆரம்பத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விளையாடும் தமன்னா, அடுத்த காட்சியில் கிணற்றில் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அவரது அண்ணனாக சுந்தர்.சி வருகிறார். தங்கை மரணத்தை விசாரிக்கும் அண்ணனுக்கு கிடைக்கும் தகவல்கள் தான் இந்த படம் என்று டிரெய்லர் மூலம் யூகிக்க முடிகிறது.

பெட்டர்மெக்ஸ் என்ற படத்தில் பேயாக நடித்த தமன்னா அடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி படத்தில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் பேயாக நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது 3-வது முறையாக அரண்மனை 4 படத்தில் பேயாக நடித்துள்ளார். ஜெயிலர் படத்திற்கு பிறகு தமன்னாவின் நடிப்பில் வெளியாக உள்ள முதல் தமிழ் படமான அரண்மனை 4 படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sundar C Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment