/indian-express-tamil/media/media_files/DkYyCoft8gbe8ybzcEpt.jpg)
அரண்மனை 4 படம்
தமிழ் சினிமாவில் திகில் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற சீரிஸ் படங்கள் முனி மற்றும் அரண்மனை படங்கள். இதில் முனி படத்தில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அரண்மனை படத்தில் 4-வது பாகம் தற்போது தயாராகியுள்ளது.
அரண்மனை முதல் பாகத்தில் வினய் ஹன்சிகா, லட்சுமிராய் நடித்திருந்த நிலையில், 2ம் பாகத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா ஆகியோரும் 3-வது பாகத்தில் ஆண்டரியா, ராஷி கண்ணா, ஆர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த அனைத்து பாகங்களிலும் இயக்குனர் சுந்தர்.சி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் தற்போது 4-வது பாகம் தயாராகியுள்ளது.
சுந்தர்.சி வழக்கம்போல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி கமிட் ஆன நிலையில், ஒரு கட்டத்தில் அவர் வெளியேறி, சார்பட்டா பரம்பரை புகழ் சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் நடித்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே அரண்மனை 4 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தள்ளிப்போன இந்த படம் தற்போது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Get ready for the biggest entertainment of this summer🥳#Aranmanai4🏚 is coming to you, this April 2024; for a rib-tickling & spine-chilling experience🔥
— Avni Cinemax (@AvniCinemax) March 27, 2024
A Film by #SundarC
A @hiphoptamizha Musical@khushsundar@benzzmedia@tamannaahspeaks#RaashiKhanna@ActorSanthoshpic.twitter.com/PflfRY5yqr
இந்த கோடையின் மிகப்பெரிய பொழுதுபோக்கிற்கு தயாராகுங்கள். அரண்மனை 4 திரைப்படம் இந்த ஏப்ரல் 2024 இல் உங்களுக்காக வருகிறது; விலா எலும்பில் கூச்சம் மற்றும் முதுகுத்தண்டு சிலிர்க்கும் அனுபவத்திற்குதயாராகுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் சுந்தர் சி மற்றும் தமன்னா இருவரும் 2-வது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே விஷால் நடிப்பல் வெளியான ஆக்ஷன் படத்தில் தமன்னா நடித்திருந்தார்.
அதேபோல், அரண்மணியின் மூன்றாம் பாகத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஷி கண்ணா, 4-ம் பாகத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.மேலும் கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us