/indian-express-tamil/media/media_files/2025/04/24/T91E6lawAWrLQUItm6vK.jpg)
வடிவேலு சுந்தர்.சி கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான காமெடி ஆக்ஷன் படமான கேங்கர்ஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்ட முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, முறைமாமன் உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் அருணாச்சலம், கமல்ஹாசன் நடிப்பில் அன்பே சிலம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, வடிவேலுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இந்த கூட்டணி பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் கேங்கர்ஸ். சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், வடிவேலுவுடன், கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவனி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா (பி) லிமிடெட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இப்படம் ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில், 6.7 என்ற நல்ல மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. சுந்தர் சி மற்றும் கேத்ரின் தெரசா இதற்கு முன்பு "கலகலப்பு 2" மற்றும் "அரண்மனை" ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். கேங்கர்ஸ் திரைபபடம், இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது திரைப்படமாகும்.
திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 24, 2025 அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் கூட்டணியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கேங்கர்ஸ் திரைப்படம், இன்று (மே 15) முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்கிடையில், சுந்தர் சி அடுத்ததாக "ஒன் 2 ஒன்" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.