/tamil-ie/media/media_files/uploads/2021/05/Gabriella.jpg)
சுந்தரி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை கே்ரியல்லாவுக்கு தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க உள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வளைதள பயன்பாடு பலரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில் சமூக வலைதளமான டிக்க டாக் நிகழ்ச்சியின் இருட்டில் இருந்து பலர் வெளிச்சத்திற்கு வந்தவர்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் ஆயீஷா மற்றும், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்திய ஆகியோரை குறிப்பிட்டு சொல்ல்லாம். இந்த பட்டியலில் தற்போது கேப்ரியல்லாவும் இணைந்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு ஆண்டு போட்டியாளராக கலந்துகொண்ட இவர், அந்த நிகழ்ச்சியில கிடைத்த புகழை விட இவரின் டிக்டாக் வீடியோக்கள் தான் பெரும் வைரலாகி இவரை பிரபலமாக்கியது என்றே கூறலாம். அதிலும் பொள்ளாச்சி சம்பவத்தில் ஒரு பெண்ணின் கதறலை இவர் டிக்டாக் செய்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பிரபலமானது. ஆனால் இந்த வீடியோவுக்கு புகழ்ச்சி அளவிற்கு சர்ச்சை மற்றும் விமர்சனங்களும் குவிந்தது.
அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஐரா மற்றும் ‘செத்தும் ஆயிரம் பொன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சன்டியில் ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில’ நடித்து வருகிறார். இந்நிலையில் கேப்ரியல்லாவுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு தேடிவந்துள்ளது. கடந்த இரண்டு படங்களிலும் துணை நடிரகயாக வந்து சென்ற இவருக்கு நாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது. லோகேஷ் என்பவர் இயக்கும் ‘N4’ என்ற படத்தில் இவர் நாயகியாக நடிக்க உள்ளார். கனா காணும் காலங்கள் புகழ் மைக்கேல் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.