scorecardresearch

போயஸ் கார்டன் வீட்டில் நள்ளிரவில் திரண்ட ரசிகர்கள்: ரஜினிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் யார், யார்?

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

போயஸ் கார்டன் வீட்டில் நள்ளிரவில் திரண்ட ரசிகர்கள்: ரஜினிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் யார், யார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரபமுகர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்ளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி பிறந்தார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ரஜினிகாந்த், 1973-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக நடித்தார்.

அதன்பிறகு முள்ளும் மலரும், பாட்சா, சிவாஜி, எந்திரன், கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடம் விதமாக அவரின் பாபா படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தனது பிறந்தநாளில் அவர் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரஜினி பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், என் இனிய நண்பர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனியா பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிப்பயணம் தொடர இந்த சிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர் தனுஷ் ஹேப்பி பர்த்டே தலைவா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரு  ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ஒ.பன்னீர்செல்வம் எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் தேவா தனது ட்விட்டர் பதிவில்,

கோடியில் ஒருவரான சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…ரஜினி சார்! நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்…வாழ்க்கையில் எப்போதும் செழிப்பும் சிறந்தும் இருக்கட்டும்! அன்பின் மிகுதியால் உயரத்தில் உயருங்கள்… மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் சிறப்பு நாள் உங்களைப் போலவே கவர்ச்சியாக இருக்கட்டும்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும் ! என்று பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில்

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்கள விட்டு போகல 23 வருஷத்துக்கு அப்புறம் இந்த டைலாக் அன்னைக்கும் இன்னைக்கும் எப்போவும் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். என்னோட படையப்பா இப்போ என்னோட ஜெயிலர் ஹேப்பி ஹேப்பி ஹேப்பி பர்த்டே ரஜினி சார் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema super star rajinikanth birthday special and wished