30 லட்ச ரூபாப மோசடி செய்த புகாரில் சிக்கிய துணை நடிகை திவ்ய பாரதி விஷம் குறித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து மாயமாகியுளளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பகலவன். சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், தன்னிடம் ரூ30 லட்சம் பணம், 10 சவரன் நகை மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த துணை நடிகை திவ்யபாரதி மீது திண்டுக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யபாரதியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பகலவன் ஆசைக்கு இணங்காததால் அவர் தன்மீது பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் பகவலன் கவிதைகளுக்கு விளம்பர மாடலாக இருந்ததற்கு மட்டுமே பணம் வாங்கியதாகவும். தன்னை சினிமாவில் நடிக்க வைக்க அவர் தன்னிடம் 10 லட்சம் பணம் வாங்கியுள்ளதாகவும், திவ்யபாரதி பதில் புகார் கொடுத்துள்ளார்.
இதனிடையே பகலவன் தனது யூடியூப் சேனலில், திவ்யபாரதி குறித்து பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார் இதனால் மனஉலைச்சலுக்கு ஆளான திவ்யபாரதி தனது தங்கை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திவ்யபாரதி தற்போது மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழில் சூரரைப்போற்று, எம்.ஜி.ஆர்.மகன் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் திவ்யபாரதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“