சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 16-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு, ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
இதில் பாலா இயக்கத்தின் நடித்த வணங்கான் படம் டிராப் ஆன நிலையில், விடுதலை படத்தின் வேலையில் இருந்ததால் வெற்றிமாறனின் வாடிவாசல் படம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் சிறுத்தை சிவாவின் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சூர்யா 42 படத்தை தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய விஷயமாக உருவாக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. முழுக்க முழுக்க கற்பனை கதை என்று உறுதியளிக்கும் விதமாக படத்தின் கான்செப்ட் டீசரை மட்டுமே தயாரிப்பாளர்கள் இதுவரை வெளியிட்டுள்ளனர். அதன்பிறகு ஏப்ரல் 11-ந் தேதி (நேற்று) படத்தின் தலைப்பு அறிவிப்பு தேதியை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் புதிய கான்செப்ட் போஸ்டரைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பு ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 9:05 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தனர். சூர்யா 42 படத்தைப் பற்றி பேசிய ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், “இயக்குநர் படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்த பிறகு, நான் ஒரு சாதாரண படத்தைத் தயாரிக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது. இந்தப் படம் இதுவரை சூர்யாவின் மிகப் பெரிய படமான பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பதில் அவருக்கு சந்தேகம் இருப்பதால், படத்தின் பட்ஜெட் குறித்த முழு உண்மையும் சூர்யாவுக்கு கூட தெரியாது எனவே, நாங்கள் அவரிடமிருந்து பட்ஜெட்டை மறைத்துவிட்டோம். இருப்பினும், செட்டைப் பார்த்ததிலிருந்து அவருக்குத் தெரியும். காட்சி ரீதியாக நாம் பெரிய காரியத்தைச் செய்ய உள்ளோம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
சூர்யா 42 படத்தின் டீசர் மே மாதம் வெளியாகும் என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 10 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஃபேண்டஸி படத்திற்காக தயாரிப்பாளர்கள் முழு முயற்சி செய்து வருகிறார்கள், இது 'ஒரு வலிமையான வீரம் கொண்ட சரித்திரம்' என்று கூறப்படுகிறது.
சூர்யா 42 படத்தின் மூலம் பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகிறார் என்பதும், படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“