Advertisment

நெருப்பு சக்தி கொண்ட வீரன்... சூர்யாவின் கங்குவா டீசர் வைரல்

சூர்யாவின் கங்குவா இதுவரை அவர் தயாரித்த படங்களில் அதிக பொருட்செலவில் ஒன்று என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bala rejected Jyothika in Pitamaga

நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் தயாராகி வரும் சூர்யா 42 படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்து வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்திங்கு கங்குவா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா, "வல்லமையுள்ள வீர சாகா" நெருப்பு சக்தி கொண்ட வீரன் என்று வர்ணிக்கப்படுவதை குறிக்கும். படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை தனது சமூக ஊடக பக்கங்களில் சூர்யா, “சிவா & டீமுடன் இந்த மாபெரும் சரித்திரத்தில் பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி. கங்குவா படத்தின் டைட்டில் லுக்கை பகிர்வதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கும் இந்த நடிகை திஷா பதானியும் நாயகியாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள கங்குவா படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தைப் பற்றி பேசிய ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “இயக்குநர் படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்த பிறகு, நான் ஒரு சாதாரண படத்தைத் தயாரிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

இந்தப் படம் இதுவரை சூர்யாவின் மிகப் பெரிய படமான பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. பட்ஜெட் குறித்த முழு உண்மையும் சூர்யாவுக்கு கூட தெரியாது. அவரிடம் இருந்து பட்ஜெட்டை மறைத்துவிட்டோம். இருப்பினும், செட்டைப் பார்த்ததிலிருந்து அவருக்குத் தெரியும். காட்சி ரீதியாக நாம் பெரிய காரியத்தைச் செய்ய உள்ளோம் என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.

சூரரைப் போற்றுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற சூர்யா, விரைவில் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். அக்‌ஷய் குமார் நடித்த சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment