வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தொடங்கப்பட்ட வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தானு விளக்கம் அளித்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் கமலின் விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த நடிகர் சூர்யா பாலாவின் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பாலாவின் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக சமீபத்தில் அறிவித்தார். இயக்குனர் பாலாவும் இதை உறுதி செய்தார்.
இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்க் வெளியாகி வருகிறது.
பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதால், ஏமாற்றத்தில் அவரின் ரசிகர்களுக்கு வாடிவாசல் குறித்து வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வாடிவாசல் படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது வாடிவாசல் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகவும், இந்த படம் தொடர்பாக வெளியாகும் ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் 10 நிமிட புகழுக்காக இதுபோன்ற செய்திகளை சிலர் பரப்புகிறார்கள். இந்த செய்தியை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்.
வாடிவாசல் சூர்யாவின் கேரியரின் முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், இது சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.எஸ்.செல்லப்பா எழுதிய வாடிவாசல் தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தமிழின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் அதில் உள்ள அரசியலைப் பற்றிய படம்தான் வாடிவாசல். தன் தந்தையைக் கொன்ற காரி என்ற புகழ்பெற்ற மற்றும் வலிமைமிக்க காளையை அடக்க விரும்பும் ஜல்லிக்கட்டு வீரரின் கதை. இப்படத்தில் தந்தை என இரு வேடங்களில் சூர்யா நடிக்கிறார்.
இப்படத்தில் அமீர், ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ள இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/