2015-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லோஃபர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் திஷா படானி. அதனைத் தொடர்ந்து தோனி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார்.

குங்பூ யோகா என்ற சைனிஷ் படத்தில் நடித்த திஷா படானி, பாஹி 2, பரத், மலன்ங், பாஹி 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஏக் வில்லன் ரிட்டன்ஸ், ராதே உள்ளிட்ட படங்களில் நடித்த திஷா தற்போது சிறுத்தை சிவா இய்ககத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மூலம் திஷா தமிழில் அறிமுகமாகிறார். தொடர்ந்து அடுத்து சிம்பு தெசிங்கு பெரியசாமி கூட்டணியில் தயாராகும் படத்தில் திஷா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தற்போது யோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ள திஷா அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வரும் பிராஜக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் திஷா படானி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் பதிவுகள் வைரலாகி வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது திஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும் சூர்யா 42 படத்திற்கு பிறகு திஷா தமிழில் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/