Tamil Cinema Update : ஜெய்பீம் என்ற மெகாஹிட் படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார்.
சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இந்த படம் வரும் மார்ச் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த டீசர் யூடியூப் தளத்தில் வைரலாகி வரும் நிலையில், அரைமணி நேரத்திற்குள் 6 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் பிரபலங்கள் பலரும் எதற்கும் துணிந்தவன் டீசரை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். குடும்ப உறவுகளை பின்னணியாக வைத்து திரைக்கதை அமைக்கபப்ட்டுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள டீசரில், நாயகன் சூர்யா மற்றும் வில்லன் வினய் மட்டுமே அதிக காட்சிகளில் வருகின்றனர். மற்றபடி சத்யராஜ், ராஜ்கிரன், சரண்யா, உள்ளிட மூத்த நடிகர்கள் யாரும் டீசரில் இடம்பெறவில்லை. இதனால் அவர்களின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்த அன்னா ன்ற குரல் – பொள்ளாச்சி சம்பவம் 🥺
— வாத்தி™ (@ItsMe_Asuran) February 18, 2022
டீஸர் end uh பக்கா சூர்யா Swag
🔥🔥🔥🔥 Congrats @Suriya_offl Anna By behalf of @dhanushkraja fans ❤️
All the best Surya👍
— Mr Nobody (@Me_MrNobody) February 18, 2022
ரொம்ப நாளுக்கு அப்பறோம் சூர்யாவுக்கு தியேட்டர்ல ஒரு நல்லது நடக்க போகுதுன்னு தோணுது👌
Also Vinay is establishing himself as director's choice for villain roles.
All the best to him too👍
என் கூட இருக்குறவங்க எப்பவும் பயபட கூடாது நம்மல யாரு ஒன்னு பன்ன முடியாது 👌👌🔥🔥
— Hᴇᴀʀᴛ ❤ Hᴀᴄᴋᴇʀ (@Vijay_Rasigan3) February 18, 2022
இன்னமும் பெரிய மாஸ் சீன் வச்சு இருக்கலாம் எல்லாமே பார்த்தா மாறி இருக்கு
— Sachinsenthil (@Sachinssenthil) February 18, 2022
மேலும் சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் பலரும் படம் வெற்றியடைய வாழ்த்துக்ள் என்று கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், ஒரு சிலர் விஜய் மற்றும் சூர்யா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“