கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த வந்த ரெட்ரோ திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீடு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கங்குவா. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், தற்போது ஆஸ்கார் விருது தகுதிப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதே சமயம், கங்குவா படம் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கங்குவா படம் வெளியாகும் முன்பே, சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்திற்கு ரெட்ரோ என்று டைட்டில் வைக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ரெட்ரோ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு தரப்பில் போஸடர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு இரும்பு கம்பிபை வைத்துக்கொண்டு கம்பீரகமாக சூர்யா அமர்ந்திருப்பது போல் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலலாகி வரும் நிலையில், சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“