சூர்ய வம்சம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1997-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் சூர்ய வம்சம். சரத்குமார், ராதிகா, தேவயானி, பிரியா ராமன், மணிவண்ணன், சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் ஜூனியர் சக்திவேல் கவுண்டர் கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தவர் நடிகை ஹேமலதா. பெண்ணான இவர், சூர்யவம்சம் படத்தில் ஆண் குழந்தையாக நடித்து அசத்தியிருப்பார்.
1995-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்சா படத்தில் ரகுவரனின் மகளாக நடித்து திரைத்துறையில் அறிமுகமான ஹேமலதா, விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மதுர, திமிரு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஹேமலதா, கடைசியாக பிரஷாந்த் நடிப்பில் வெளியான அடைக்கலம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
1999-ம் ஆண்டு ராதிகா நடிப்பில் வெளியாகி இன்றுவரை பாராட்டுக்களை பெற்று வரும் சித்தி தொடரின் மூலம் சின்ன்த்திரையில் அறிமுகமான ஹேமலதா, மனைவி, கனா காணும் காலங்கள், மகள், அன்பே வா, தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு முடிவடைந்த முந்தானை முடிச்சு என்ற சீரியலில் நடித்திருந்தார். அதன்பிறகு சின்னத்திரையில் இருந்து விலகிய ஹேமலதா, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கிளிப்பில், ஹேமலதா தனது மகளுடன் நிற்கிறார். அலங்கரிக்கப்பட்ட தனது வீட்டில் சுவரில் தங்கள் குடும்பப் படத்தை மாட்டியுள்ளார். தாய்-மகள் இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“