தமிழ் சினிமாவில் பல்துறை வித்தகர் என்று பெயரேடுத்து டி.ராஜேந்து தான் இளையராஜா இசையில் ஏன் பாடல் எழுதவில்லை என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடங்கியவர் டி.ராஜேந்தர். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இவர் 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து வந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்த டி.ராஜேந்தர் தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காட்சிகள் அமைப்பது என்பது பற்றி பலருக்கும் முன்னுதாரனமாக இருந்தவர்.
இப்படி பல திறமைகளை வைத்துள்ள டி.ராஜேந்தர் தனது படங்கள் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதேபோல் பாடல்களும் எழுதியுள்ளார். ஆனால் இளையராஜா இசையில் இவர் ஒரு பாடல் கூட எழுதியதில்லை. இது குறித்து கேட்டபோது, நான் இயக்கிய மைதிலி என்னை காதலி என்ற படத்தில் ஒரு பாடலை எழுதி இசையமைத்தேன்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் எக்கோ நிறுவனம் தான் அந்த பாடலை ரெக்கார்டு செய்கிறது. அப்போது சிலர் இவ்வளவு அழகா பாட்டு எழுதுறீங்களே நீங்கள் ஏன் ராஜா சார் இசையில் எழுத கூடாது என்று கேட்டார்கள். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பாடல் எழுதினால் ரெக்கார்டு பண்டும்போது பக்கததில் இருப்பேன். ஒரு சில வரிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பாடகருக்கு தெரியவில்லை என்றால் சொல்லி தருவேன்.
ஆனால் ராஜா சார் இசை என்றால் அது நடக்காது வரிகள் புரியவில்லை என்றால் எனக்கு தெரியாமலே மாற்றிவிடுவார்கள். அதன்பிறகு நீங்கள் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் எனக்கு என் சுயமரியாதை பாதிக்கும். அதனால் ஒரு பாடல் எழுதுவதற்கே என்ன பெரிய சம்பளம் கொடுப்பதாக சொன்னாலும் போகாத ஆள் நான். என்னை பிடித்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் மட்டுமே நான் வேலை செய்திருக்கிறேன். நண்பர் விஜகாந்த்க்கு சட்டம் சிரிக்கிறது என்ற படத்திற்கு மியூகிக் பண்ணேன்.
அவருக்கு என்னை பிடித்திருந்தது. லைக் பண்ணார். அதேபோல் கூலிக்காரன் படத்திலும் பண்ணேன் படத்தில் பாடல்களை கேட்டு விஜயகாந்த் குழந்தை மாதிரி சிரிப்பார். வச்சக்குறி தப்பாது பாட்டுக்கெல்லாம் பயங்கரமாக எஞ்சாய் பண்ணி கேட்டார். என்னை ரசித்தால் மட்டுமே என்னை பிடித்தால் மட்டுமே அவர்களின் படங்களில் நான் வேலை செய்திருக்கிறேன். என்னை கவினித்து எடுக்கப்பட்ட படம் தான் கவண். அதனால் தான் அதில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“