Advertisment

விஜே அஞ்சனாவுக்கு இன்ஸ்டா- போனில் வக்கிர தொல்லை: சென்னை போலீசில் புகார்

VJ Anjana husband Chandran tweets about his wife receiving vulgar messages in social pages Tamil News: பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி விஜே அஞ்சனாவின் கணவர் சந்திரமௌலி, தனது மனைவிக்கு தவறான மற்றும் துன்புறுத்தும் வகையிலான வக்கிரமான மெசேஜ்களை மர்ம நபர்கள் அனுப்பி வருவதாகவும், இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil cinema Tamil News: VJ Anjana husband Chandran tweets about his wife receiving vulgar messages in social pages

Tamil cinema Tamil News: சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாகவும், மொபைல் போன்கள் மூலமாகவும் மர்ம நபர்கள் தவறான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பிகின்றனர் என பள்ளி மாணவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலுத்த எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற குற்றங்கள் தொடராத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி விஜே அஞ்சனாவின் கணவர் சந்திரன் என்கிற சந்திரமௌலி, தனது மனைவிக்கு தவறான மற்றும் துன்புறுத்தும் வகையிலான வக்கிரமான மெசேஜ்களை மர்ம நபர்கள் அனுப்பி வருவதாகவும், இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

publive-image

மேலும் அந்த பதிவில் “இந்த பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு காவல் துறையின் உதவியை நாடியுள்ளேன். எதற்காக என்றால் + 91 96557 12265 என்ற எண்ணிலிருந்து தொடர்ந்து தவறான மற்றும் துன்புறுத்தும் வகையிலான வக்கிரமான மெசேஜ்கள் எனது மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்குக்கிற்கு அனுப்படுகின்றன. இந்த மர்ம நபர் மீது ஏற்கனவே சென்னை கமிஷனர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் உள்ளது.” என்றுள்ளார்.

கணவரின் ட்விட்டை ரி-ட்வீட் செய்துள்ள விஜே அஞ்சனா, "சில வருடங்களுக்கு முன்னர் இதே பிரச்சினையை எதிர்கொண்டேன். அந்த பிரச்சனை சைபர் குற்றவியல் பிரிவின் உதவியுடன் தீர்க்கப்பட்டது. இதுபோல எனக்கு தொடர்ந்து தொந்தரவுகள் வந்து கொண்டே உள்ளன. என்னை இயங்க விடாமல் செய்ய இப்படியான மோசமான மெசேஜ்களை வருகின்றன. ஆனால் இப்போது வந்திருக்கும் சில மெசேஜ்கள் என்னை அச்சுறுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Tamil Cinema Twitter Social Media Sexual Harassment Vj Anjana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment