தமிழ் சினிமாவில் தலைவர் 170 படத்தின் மூலம் அறிமுகமான உள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 1997-ம் ஆண்டு வெளியாள உல்லாசம் படமே அவரது முதல் தமிழ் படம் என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாக உள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ரஜினிகாந்துடன், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியார் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் நடிகர் அமிதாப் பச்சன் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் இணைய உள்ளார்.
இதனிடையே நடிகர் அமிதாப் பச்சன் தலைவர் 170 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அவர் கடந்த 1997-ம் ஆண்டே ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். சமீபத்தில் லெஜண்ட் சரவணா நடிப்பில் வெளியான லெஜண்ட் படத்தை இயக்கிய ஜே.டி ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான படம் தான் உல்லாசம்.
அஜித், விக்ரம், மகேஷ்வரி, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் அமிதாப் பச்சன் தயாரிப்பில் வெளியானது. ஆனால் உல்லாசம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும் படத்தின் கதைக்காக பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதன்பிறகு தமிழில் படம் தயாரிக்காத அமிதாப் பச்சன் தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“