New Update
/indian-express-tamil/media/media_files/txA4eoYzI7nB6hBfpXOm.jpg)
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு இன்று நெல்லையில் தொடங்குகிறது என்றும், 3 நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து ஜெய்பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சில நாட்கள் அங்கே ஷூட்டிங் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை பணகுடி அருகே மங்கம்மாள்புரத்தில் உள்ள தனியார் ஓடு கம்பெனியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த 3 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்கும் என்றும், ரஜினிகாந்த் உள்ளிட்ட படத்தின் முன்னணி நடிகர்களின் காட்சிகள் படமாக்கபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் திரண்ட நிலையில், தற்போது அவர் நெல்லைக்கு வருகிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து அவரை நேரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். குறுகிய கால தயாரிப்பான தலைவர் 170 படம் அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.