லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தற்காக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் வரும் ஏப்ரல் 22-ந் தேதி படத்தின் டீசருடன் டைட்டிலும் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் தொடர்பான ஒரு குடோனில் கிஷோர் வேலை செய்துகொண்டிருக்க, அவருக்கு ஒருவர் போன் செய்து உள்ளே ஒருவன் வருகிறான். பொருள் அனைத்தும் பத்திரம் என்று சொல்ல, கிஷோர் அவரை அடிப்ப, அடுக்கடுக்கான வாட்ச்களை எடுத்து செல்கிறார். ஆனால் இறுதியில் ரஜினிகாந்த் என்டரி கொடுத்து அனைவரையும் அடித்து துவைக்கிறார்.
குறிப்பாக ரஜினிகாந்த் என்டரி ஆகும்போது ரங்கா படத்தின் தான் பேசிய ‘’அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்’’ என்ற டைலாகை பேசிக்கொண்டே அனைவரையும் அடித்து நொறுக்குகிறார். தொடர்ந்து இறுதியாக படத்திற்கு கூலி என்ற டைட்டில் வருகிறது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத்த இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்று டைட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டீசரின் முடிவில் நடிகர் ரஜினிகாந்த், ராமராஜன் படத்தில் வரும் செண்பகமே செண்பகமே என்ற பாடலை விசில் பாடுகிறார். இந்த படத்தில் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.