/tamil-ie/media/media_files/uploads/2022/06/varisu.jpg)
Big expectation is for an official update on his upcoming movie 'Thalapathy 66' and the team has officially given them reason to celebrate even more : விஜய் நடித்து வரும் 66 -வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது.
ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ். பிரபு. ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.
நடிகர் விஜய் சில வருடங்களுக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படத்தில் நடித்து வருகிறார் அதே சமயம் தெலுங்கில் நேர்த்தியான கதைகளை இயக்கி பிரபலமான இயக்குநர் வம்சி கதை மற்றும் மேக்கிங்கில் விஜயை வேறு கோணத்தில் காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைத்துள்ளதாக வதந்திகள் பரவியது. இது குறித்து படக்குழுவும் எவ்வித தகவலும் வெளியிடாத நிலையில், நாளை விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தி பாஸ் ரிட்டன்ஸ் என்ற கேப்ஷனுடன் வெளியான போஸ்டரில், விஜய் ஸ்டைலாக கோட் சூட்டில் மிளிர்கிறார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் வெற்றி என இப்போதே கொண்டாடி வருகிறார்கள்.
#Varisupic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.