scorecardresearch

எல்.சி.யூ வரிசையில் தளபதி 67? சூசகமாக உறுதி செய்த பகத் பாசில்

விஜய்யின் தளபதி 67 படம் குறித்து நடிகர் பகத் பாசில் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

எல்.சி.யூ வரிசையில் தளபதி 67? சூசகமாக உறுதி செய்த பகத் பாசில்

வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் தான் நடிக்க வாய்ப்பு இருப்பதாக நடிகர் பகத் பாசில் கூறியுள்ளார்.

விக்ரம் என்ற மெகாஹிட் வெற்றிப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படம் லோகேஷ் சிமாட்டிக் யூனிவர்ஸ் வரிசையில் வருமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

மேலும் வாரிசு படத்தின் வெளியீட்டிற்காக தளபதி 67 குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விக்ரம் படத்தின் அமர் என்ற முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் பகத் பாசில், தளபதி 67 குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி தளபதி 67 படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் வரிசையில் வருவதால் இந்த படத்தில் நான் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

பகத் பாசிலின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில்,  லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்றால் கமல்ஹாசன் சூர்யா, உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க வாய்ப்பு இருக்குமா? மாஸ்டர் படம் போல் இதில் விஜய் சேதுபதியும் நடிப்பாரா என்று பெரிய கேள்விகளுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜின் கடைசிப் படமான விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நாயகான நடித்த நிலையில், பகத் பாசில் அமர் என்ற ஏஜென்டாக நடித்திருந்தார். இந்த படத்தின் இறுதியில், அமர் ஒரு அனுபவமிக்க உளவாளியாக தனது அரசாங்க வேலைக்கான விசுவாசத்தை கைவிட்டு, தனது மனைவியின் கொலைக்கு பழிவாங்க ஆக்ரோஷஷமாக கிளம்புவது போன்று முடிந்திருக்கும். இதனால் அமர் முக்கிய கேரக்டரில் இருக்கும்படியான கதை வருமா என்று பகத் பாசிலிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,  “தயாரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என்று பதிலளித்தார்.

தளபதி 67 படத்தின் பூஜையின் போது கூட எந்த புகைப்படங்களும் வெளியாகாத நிலையில், படம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனிடையே இந்த வாரம், தளபதி 67 படம் குறித்து தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விக்ரம் படம் போன்று இந்த படத்திற்கும் டீசர் வெளியிடப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபஹத் பாசில் தற்போது ப இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், புஷ்பா 2: தி ரூல், தூமம் உள்ளிட்ட பல பல படங்களில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema thalapathy 67 actor fahad fazil share important information