Tamil Cinema Thalapathy 67 pooja And varisu Veera simha Reddy Clash தளபதி 67 பூஜை... விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா... டாப் 5 சினிமா செய்திகள் | Indian Express Tamil

தளபதி 67 பூஜை… விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா… டாப் 5 சினிமா செய்திகள்

விஷ்னு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த வாரம் வெளியாக கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

தளபதி 67 பூஜை… விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா… டாப் 5 சினிமா செய்திகள்

விஜய்க்கு போட்டியாக பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணான தற்போது வீர சிம்ஹா ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  ஆந்திராவின் சங்கராந்தியை முன்னிட்டு வீர சிம்ஹா ரெட்டி வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துடன் விஜய் நடித்துள்ள வாரிசு படமும் ஆந்திராவில் பிரம்மாண்டாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்

இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் பரபரப்பாக இயங்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரத்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிமா நம்பியார் நாயகியாக நடித்து வரும் இந்தபடத்தில், நந்திதா ஸ்வேதா, ரம்யா நபீசன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 5 (இன்று) ரத்தம் படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 67 படத்தின் பூஜை

பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் அடுத்து விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்து நாள்தோறும் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் பூஜை இன்று (டீசம்பர் 5) தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா

முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது இவர் நாயகியாக நடிக்கும் படத்திற்கு ரகு தாத்தா என்று பெயரிப்பட்டுள்ளது. சுமன் குமார் இயக்கும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கேரகட்டரில் நடித்து வருகிறார். கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

கட்டா குஸ்தி குறித்து ஐஸ்வர்யா லட்சுமி

விஷ்னு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த வாரம் வெளியாக கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, முதலில் இந்த தலைப்பு எனக்கு புரியவில்லை. அதன்பிறகு இயக்குனரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema thalapathy 67 pooja and varisu veera simha reddy clash