Advertisment
Presenting Partner
Desktop GIF

கில்லி ரீ-ரிலீஸ்... வசூல் மன்னனாக வலம் வரும் விஜய் : முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு?

தேர்தலை முன்னிட்டு புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கில்லி படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Ghilli Re release

கில்லி படத்தில் விஜய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், கடந்த 2 மாத காலமாக தமிழகத்தில் நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சார திருவிழா முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் காரணமாக பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே விஜய் தனது ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார் என்று சொல்லாம்.

Advertisment

இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் காரணமாக தமிழ் சினிமாவில் இந்த ஏப்ரல் மாதம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பழைய பிளாக்பஸ்டர்களை மீண்டும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2004-ம் ஆண்டு தரணி இயக்கிய விஜய்யின் கில்லி திரைப்படம் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இன்று (ஏப்ரல் 20) ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, கில்லி படம் படம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ₹10 கோடி வசூலிக்கக்கூடும். இது குறித்து சினிட்ராக்கின் கூற்றுப்படி, கில்லி ஏற்கனவே முதல் நாளில் (ஏப்ரல் 20) உலகளாவிய முன்பதிவில் சுமார் ₹3 கோடி வசூலித்துள்ளது. விஜய்யின் படங்கள் அவரது முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடிப்பதாக கூறப்படும் நிலையில், நிலையில், இந்த படத்தின் மறு வெளியீடு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கில்லி படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான அர்ஜுனர் வில்லு மற்றும் அப்படி போடு ஆகிய பாடல்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் நடனமாடும் வீடியோக்களால் சமூக ஊடகங்களில் வெளியாகி ஆராவாரம் செய்து வருகிறது. இது குறித்து ராம் முத்துராம் சினிமாஸ் தங்களது எக்ஸ் பககத்தில்,உண்மையாக கில்லி தளபதி விஜயின் கேரியரில் மாற்ற முடியாத சாதனைகள்! ஏப்ரல் 20 அன்று மீண்டும் ஹவுஸ்ஃபுல் என்று பதிவிட்டுள்ளனர்.

படத்தின் ரீ-ரிலீஸுக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கும் படத்தின் நாயகி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில்நன்றி நன்றி நன்றி. இதுபோன்ற அற்புதமான பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீங்கள் எனக்கு அனுப்புகிறீர்கள் என்று கில்லி படத்தின் போஸ்டருடன் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வார இறுதியில் அவர் ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தைப் பார்ப்பார் என்றும் செய்திகள் வெளியாகின.

கடந்த 2004-ம் ஆண்டு வெளியாக கில்லி திரைப்படம், திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது மற்றும் 2004 இல் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ₹50 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது, விஜய் அரசியலுக்கு வந்து தமிழ் சினிமாவை விட்டு வெளியேற உள்ளதால், அவரது ரசிகர்கள் அவர் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவரது ஒவ்வொரு அசைவையும் அவர்கள் பார்த்து கைதட்டி,வருகின்றனர்.

அதற்கு முக்கிய சாட்சியாக நேற்று மக்களவை தேர்தலில் அவர் வாக்களித்தபோது, வாக்குச்சாவடியில் கும்பலாக குவிக்கப்பட்டார். தற்போது, கில்லியின் ரீ-ரிலீஸ் மற்றும் அதன் வெற்றியுடன், அனைவரின் பார்வையும் கோட் படத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த  எல்லா காலத்திலும் மிகப் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trisha Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment