/tamil-ie/media/media_files/uploads/2022/10/Varisu.jpg)
Vamshi's update on Thalapathy Varisu : பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு குடும்ப பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளதால் வாரிசு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வாரிசு படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக இப்படத்தில் டீசர் டிரெய்லர் ஃபர்ஸ் சிங்கள் உள்ளிட்ட அப்டேட்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் முடிந்த தீபாவளி தினத்தில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனிடையே ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வாரிசு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
The much-awaited #VarisuFirstSingle promo is releasing Today at 6:30 PM 💥
Stay Tuned nanba 🥁#Thalapathy@actorvijay sir @directorvamshi@iamRashmika@MusicThaman#BhushanKumar#KrishanKumar#ShivChanana@TSeries#Varisu#VarisuPongalpic.twitter.com/uriUcF2vrn— Sri Venkateswara Creations (@SVC_official) November 3, 2022
அதன்படி வாரிசு படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. தமன் இசையில் விவேக் எழுதிய இந்த பாடலை விஜய் மற்றும் மானசி பாடியுள்ளனர். ரஞ்சிதமே ரஞ்சிதமே என தொடங்கும் இந்த பாடலின் ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.