scorecardresearch

இந்த ஆண்டு ரிலீஸ் தமிழ் படங்கள்: சூப்பர் ஹிட் எவை? படு ஃப்ளாப் எவை?

கொரோனா காலகட்டத்தில் ஒடிடி தளங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. தியேட்டர்களில் சிக்கல்களால் வெளியாக முடியாத பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் பாதி கடந்துவிட்டது. இந்த அரையாண்டில் தமிழ் சினிமாவில் பல படங்கள் எதிர்பார்க்க வைத்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.  கொரோனா தொற்று முடிந்து வெளியான முன்னணி நடிகர்களின் சில படங்கள் பாக்ஸ்ஆபீசின் வசூலை நிமிர செய்தது என்று சொல்லாம். ஆனால் பல படங்கள் பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது.

அந்த வகையில் 2022-ம் அரையாண்டில் ரசிகர்களை மனம் கவர்ந்த சில படங்களை பார்க்கலாம் கொரோனா காலகட்டத்தில் ஒடிடி தளங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. தியேட்டர்களில் சிக்கல்களால் வெளியாக முடியாத பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.  

என்னதால் ரசிகர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், அவர்களின் ரசனைக்கேற்ப படங்களை கொடுப்பதில் பல நட்சத்திரங்கள் கோட்டை விட்டுவிடுகின்றனர். இதில் அவர்கள் செய்கின்ற இரண்டு விஷயங்களில் ஒன்று சினிமாவின் வணிகம் இன்று இருக்கும் சூழ்நிலையின் தீவிரத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவர்கள் தொடர்ந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லாம்.

2022 அரையாண்டில் சறுக்கிய படங்கள் :

பீஸ்ட்

மிருகம் டிரைலர் விஜய்

விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பீஸ்ட், ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலை பயங்கரவாதிகள் கைப்பற்றியதால், துப்பாக்கி முனையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களை முன்னாள் ராணுவ வீரன் வீரராகவன் எப்படி மீட்கிறார் என்பதுதான். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது வழக்கமான பாணியில் கதை அமைத்திருந்தாலே படம் தமிழ் சினிமாவின் சொந்த டை ஹார்டாக இருந்திருக்கும். விஜய் என்ற ஒரு நட்சத்திரத்தை மட்டுமே நம்பி கதையில் ஈடுபாடு காண்பிக்காததால் படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது.

வலிமை

வலிமை படத்தில், அஜித் குமார் குற்றங்களை குறைப்பதை விட குற்றங்கள் செய்யாமல் தடுப்பதே புத்திசாலித்தனம் என்று நினைக்கும் போலீஸ் அதிகாரி. கதை,  திரைக்கதை நல்ல நடிப்பு போன்ற குறைகளை அஜித்தின் மோட்டார் பைக் ஓட்டும் திறமை மநைத்துவிடும் என்று. தயாரிப்பாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து வேண்டிக்கொண்டது போன்று இருந்தது இந்தப் படம். அஜித் நடிப்பில் ஒரு மந்தமான படம் வெளியானது இது முதல் முறை அல்ல. ஆனால், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களுக்குப் பிறகு இயக்குனர் எச்.வினோத்திடம் இருந்து வலிமை நாம் எதிர்பார்க்கும் படம் அல்ல என்பதை உணர வைத்துவிட்டார்.

எதர்க்கும் துணிந்தவன்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கை அடிப்படையாகக் கொண்டு பாண்டிராஜ் எழுதி இயக்கியிருக்கும் எதர்க்கும் துணிந்தவன். படத்தில், பல இளம் பெண்களை மிரட்டல் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண்களை மதிக்கும் திரைப்படத்தை உருவாக்கும் எண்ணத்தில் இயக்குநர் பாண்டிராஜ் குற்றத்தைப் பற்றி ஆழமாக சந்திப்பதை தவறவிட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்களில் அற்புதமான நடிப்பை வழங்கிய பிறகு, சூர்யா முற்றிலும் மந்தமான மற்றும் மனச்சோர்வை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

எஃப்ஐஆர்

விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எப்ஐஆர், இஸ்லாமிய வெறுப்பின் தீமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படம் கான்செப்ட் நன்றாக இருந்தாலும், அது கையாளும் விஷயத்தில் தடுமாறியுள்ளது.  நல்ல முஸ்லீம்களை கெட்ட முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்தும் உணர்வக்காகவே இந்த படம் பயன்படுத்துகிறது.

ஹே சினாமிகா

ரொமாண்டிக் காமெடி ட்ராமாவா உருவான இந்த படத்தின் மூலம் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமானர். பிருந்தா, அழகான மனிதர்களைக் கொண்ட பருவமழையின் பின்னணியில் தனது கதையை அமைக்கும் வரை, இளம் பார்வையாளர்களைக் கவரும் ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க முடியும் என்ற பெரிய நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் அதை செய்ய தவறிவிட்டார். துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரின் நல்ல தோற்றமும் வசீகரமும் இந்த திரைப்படத்தைக் காப்பாற்றத் தவறிவிட்டன.

மாறன்

மாறன் ஒரு ஃபயர்பிரண்ட் பத்திரிகையாளரின் கதையைச் சொல்கிறது. அவர் உண்மை என்று நினைப்பதை வெளியிடுவதற்கு முன்பு யோசிக்க மாட்டார். மீண்டும், இது ஒரு திரைப்படத் தயாரிப்பாளரின் துணை தயாரிப்பு என்று சொல்லாம். இயக்குநர் ஒரு செய்தி வெளியீட்டுத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள தவறிவிட்டார். தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, அமீர் போன்ற திறமைகள் இந்தப் படத்தில் மொத்தமாக வீணடிக்கப்பட்டுள்ளன.

காத்துவாகுல ரெண்டு காதல்

காத்துவாகுல ரெண்டு காதல் ஒரு சராசரி ராம்போவை சுற்றி நகர்கிறது. அவர் தனது துரதிர்ஷ்டத்தை ஒரு கெட்ட சகுனம் என்று அவர் உறுதியாக நம்புகிறார், இதனால் அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த ஆபத்தில் இருந்து வெளியேறிய இரண்டு அழகான பெண்கள் வாழ்க்கையின் வந்தவுடன் ராம்போவின் வாழ்ககை அதிர்ஷ்டம் மாறுகிறது. அவன் பேராசை கொண்டு இருவரையும் மணக்க விரும்புகிறான். எனவே இது ஒரு ஆணுக்காக இரண்டு பெண்கள் சண்டையிடும் பழமையான கதை. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படம் சுமாரான படமாக அமைந்தது.

வரவேற்பை பெற்ற படங்கள்

விக்ரம்

கமல்ஹாசன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 80 களில் இறுதியில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து கடன் வாங்கி, தற்போதைய தலைமுறை திரையுலக ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு புதுப்பித்துள்ளார். விக்ரம் ஒரு வேகமான, பரபரப்பான மற்றும் மிகவும் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். கமல்ஹாசனின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுக்கு எழுதிய காதல் கடிதம் என்று சொல்லாம். ஆனால், அதே சமயம் கமலுடன் நடித்த மற்ற நடிகர்களுக்கும் சமமான வாய்ப்பு கொடுத்த படம் விக்ரம்.

மகான்:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனிமனிதவாதத்திற்கான இருக்கும்  ஒரு நபரை ஒரு கருத்தியல் வலைக்குள் தள்ளும் சமூகத்தின் மோசமான வழிகளையும் கையாள்வதை கதையாக மாற்றியுள்ளார். நாயகன் விக்ரம் தனது சொந்த விதிமுறைகளில் வாழ விரும்பும் ஒரு மனிதராக உள்ளார் மற்றும் ஒவ்வொரு திருப்பத்திலும் சமூகத்தால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் நிற்கிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் நடிப்பை வெளிப்படுத்த இந்த திரைப்படம் ஏராளமான வாய்ப்பை அளித்துள்ளது. ஆனால், பலவிதமான உணர்ச்சிகளின் மூலம் நம் கவனத்தை ஈர்ப்பதற்காக அவரது தந்தையைப் போல அவரது மகன் இன்னும் உருவாகவில்லை.

கடைசி விவசாயி

கடைசி விவசாயி மூலம், எம் மணிகண்டன் ஏறக்குறைய சரியான சினிமாவை கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். பணத்துக்காக நிலத்தை கொடுக்க மறுக்கும் ஒரு விவசாயியின் வாழ்க்கையைப் பிரபதிபலிக்கிறது. இந்த படம். அந்த விவசாய நிலம், அவனது வாழ்வாதாரமாக நின்றுவிட்டாலும், காலையில் எழுந்து சுறுசுறுப்பாக இயங்குவதற்கு அந்த நிலம் அவசியமாகிறது. விவசாயி மாயாண்டி ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், ஆனால் அவர் வாழும் விதம் இன்று நாம் எதிர்கொள்ளும் கூட்டு தார்மீக மற்றும் ஆன்மீக நிலையைப் பற்றி பேசுகிறது.

சாணி காயிதம்

இரண்டு உடன்பிறப்புகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து பழிவாங்க கொலைக் களத்தில் ஈடுபடும் கதையைச் சொல்கிறது சாணிக்காயிதம். ஜாதி வன்முறையும், அப்பாவி மக்களுக்கு ஏற்படும் மனிதாபிமானமற்ற விளைவுகளும் தான் இந்தப் படத்தின் மையக்கரு. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த பிரச்சனைகளை வெற்றிமாறனின் ரம்மியத்திற்கும் மாரி செல்வராஜின் கவித்துவத்திற்கும் இடையே ஒரு குறுக்குவெட்டு போல் உணரும் பாணியில் கொடுத்துள்ளார்.

மாமனிதன்

விஜய் சேதுபதி திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு குறிப்பிட்ட கொள்கையை வைத்திருப்பதாகத் தெரிகிறது. நல்ல கேரக்டர்களை பாதுகாக்க விரும்பும் திரைப்படத்தால் அவர் உச்சத்தில் இருக்கிறார். விக்ரம், மாஸ்டர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களிலும், மாமனிதன் போன்ற சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள விஜய் சேதுபதி சில படங்கள் வசூலில் சாதித்து வரும் நிலையில், சில படங்கள் அவரிடம் இருக்கும் கலைஞனை பாதுக்ககிறது.

டான்

டான் ஒரு முழுமையான காமெடி செண்டிமென்ட். படம். பெற்றோர்களின் இஞ்சினியர் படிப்பின் மீதான மோகத்தைக் கையாளும் அனைத்துத் திரைப்படங்களாலும் நம் நினைவுகளில் ஆழமாகப் பதிந்திருக்கும் டான். பழக்கபட்ட கதைான் என்றாலும் கூட, நகைச்சுவை, உணர்வுகள் இறுதிக்கட்த்தில் வரும் அப்பா செண்டிமென்ட் படத்தை ரசிகர்கள்  மத்தியில் நிலை நிறுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema the best and worst tamil movies the first half of 2022

Best of Express