விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் தி ஃபேமிலி ஸ்டார் ("The Family Star") படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம் :
சிக்கனமாக செலவழிக்கும் ஒரு நடுத்தர இளைஞனாக வருகிறார் நாயகன் கோவர்தன் (விஜய் தேவரகொண்டா). நாயகன் வீட்டிற்கு நாயகி இந்து (மிருணாள் தாகூர்) குடி வருகிறார். ஆரம்பத்தில் இந்துவை கவர பல வேளைகளில் ஈடுபட்டு அவரை காதலிக்க வைக்கிறார் கோவர்தன், ஆனால் ஒரு கட்டத்தில் இந்துவின் உண்மை நோக்கம் தெரிந்து அவரை வெறுக்கிறார். அதன்பிறகு இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது ? என்பது தான் படத்தின் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
பட்ஜெட் பத்பநாபனாகவே வாழும் விஜய் தேவரகொண்டா ஒரு சில இடங்களில் பல நடுத்தர இளைஞர்களின் வலிகளை திரையில் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார். நடனம், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கும் நாயகன் சென்டிமென்டில் சற்று சறுக்கி உள்ளார். அழகு பதுமையாக திரையில் ஜொலிக்கிறார் நாயகி மிருணாள் தாகூர். அவரின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறது. வழக்கமான வில்லனாக ஜகபதி பாபுவின் நடிப்பு சுமார்.
இயக்கம் மற்றும் இசை
கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்திருக்கிறார் இயக்குனர் பரசுராம். குடும்பங்களை டார்கெட் செய்து பேமிலி ட்ராமா கதையை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அதில் புதுமை எதுவும் இல்லை என்பது சறுக்கல். கோபி சுந்தரின் இசை படத்திற்கு தேவையான அளவு இருக்கிறது, 2 பாடல்கள் சூப்பர் மற்றவை சுமார்.
படத்தின் பிளஸ் :
ஓரளவிற்கு சுமாரான முதல் பாதி
செண்டிமெண்ட் காட்சிகள்
விஜய் தேவரகொண்டா - மிருணாளாவின் காதல் காட்சிகள்
பாடல்கள்
படத்தின் மைனஸ் :
அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள்
லாஜிக் இல்லாத காட்சிகள்
டம்மி வில்லன்
சிரிப்பே வராத காமெடிகள்
சுமாரான கதைக்களம்
சுவாரசியம் இல்லாத திரைக்கதை
போரான இரண்டாம் பாதி
மொத்தத்தில் விஜய் தேவரகொண்டாவின் முந்தைய படங்களை போலவே, மிகவும் சுமாரான படமாக முடிகிறது இந்த "The Family Star"
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“