மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான தேவர்மகன் படமும் அந்த படத்தில் இடம்பெற்ற போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலும் தனது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அப்படத்தின் நாயகன் கமல்ஹாசன் முன்பே தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இது குறித்து இயக்குனர் ராசி அழகப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான தேவர் மகன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதிய கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். பரதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியானபோது தேவர் சமூகத்தை பெருமைபடுத்தும் விதமாக அமைக்கப்பட்ட போற்றி பாடடி பெண்ணே என்ற பாடல் இன்றும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் பேசிய மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த பாடல் மற்றும் தேவர் மகன் படத்தால் தான் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளதாக கூறியிருந்தார். இதனிடையே தற்போது இந்த பாடல் குறித்து இயக்குனர் ராசி அழகப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த காலக்கட்டங்களில் சின்னக்கவுண்டர், பெரிய கவுண்டர் பொண்ணு, எஜமான் என பல படங்கள் வந்தது. இந்த படங்களை மக்கள் கடந்து சென்றுவிட்டார்கள். அந்த படங்களில் சாதி வேற்றுமையாக பார்க்கப்படவில்லை. அதை ஒரு கதைக்களமாக எடுத்துக்கொண்டு படம் எடுத்தார்கள். ஆனால் ஒரு முற்போக்கு வாதியான கமல்ஹாசன் நடிப்பில் இப்படி ஒரு படம் வரும் என்று யாரும் எதிர்பார்ககவில்லை.
ஆனால் இந்த படம் எடுக்கும்போது அந்த குற்றச்சாட்டு இல்லை. பெரிய தேவருக்கும் சின்ன தேவருக்கும் இடையே நடக்கும் சண்டைதான் படம். இதில பெரிய தேவரை ஒரு 10 காட்சிகள் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு பாடல் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்று வரும்போது இளையராஜா மெட்டு போட வாலி பாடல் எழுதினார். அது முழு பாடலாக வருகிறது. 30 நிமிடங்கள் சொல்ல வேண்டியதை 3 நிமிடத்தில் முடித்துவிட்டோம்.
பெரிய கணேசனின் வாழ்க்கையை அழுத்தமாக சொன்னால் தான் அவருக்கு முரண்படும் கமல்ஹாசன் வாழ்க்கையை தொடங்க முடியும். அதனால் தான் ஷாட் அன்ட் ஸ்வீட்டாக சொல்ல வேண்டும் என்பதால் அந்த பாடல் அமைக்கப்பட்டது. அவர் அந்த ஊரின் பெரிய மனிதன் மட்டுமல்ல ஊரில் இருக்கும் நல்லது கெட்டது என அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடியவர். அதனால் அவரை போற்றி பாடுகிறார்கள். அப்போது நன்றாக இருந்த பாடல் 30 வருடங்களுக்கு பிறகு தவறாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.