ரஞ்சிதமே சாதனையை முறியடித்த சில்லா
அஜித் நடிப்பில் தயாராகி வரும் துணிவு படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல நேற்று வெளியிடப்பட்டுது. சில்லா சில்லா என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். ஜிப்ரான் இசைமைத்துள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் விஜயின் வாரிசு படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. ரஞ்சிதமே பாடல் ஒரு மணி நேரத்தில் 500கே லைக் பெற்ற சாதனையை துணிவு பாடல் 47 நிமிடங்களில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் சாதனையை எட்ட முடியாத ராஜமௌலி
ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், இந்த படம் ஜப்பானிய மொழியில வெளியாகி அங்கும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் மூலம் ரஜினிகாந்த் ஜப்பானில் பல ரசிகர்களை பெற்றார். இதனிடையே ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் ப்ரமோஷனுக்காக பலகோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், ஆர்ஆர்ஆர் படம் 20 கோடி மட்டுமே கலக்ட் செய்துள்ளது. இதனால் ரஜினியின் சாதனையை ராஜமௌலி முறியடிக்க தவறிவிட்டார்.
ரீ-ரிலீஸ்க்கு தயாராகும் ரஜினி படங்கள்
எம்.ஜி.ஆர். சிவாஜி படங்கள் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ரஜினியின் பாபா படம் ரீ-ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு சிவாஜி, தர்பார், 2.0 உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யோகி பாபு – லட்சுமி மேனன் பட போஸ்டர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வலம் வரும் யோகிபாபு அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில், மலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுடன் லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ளார். மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் இமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கலான் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப்-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“