Advertisment

சூர்யா கேரக்டரில் அதர்வா? துணிவு முதல் சிங்கிள் அப்டேட் : டாப் 5 சினிமா

கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், அவரது தயாரிப்பு நிறுவனமும் விலகிவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
சூர்யா கேரக்டரில் அதர்வா? துணிவு முதல் சிங்கிள் அப்டேட் : டாப் 5 சினிமா

சூர்யாவுக்கு பதிலாக அதர்வா?

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வநத படம் படம் வணங்கான். ஆனால் இந்த கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், அவரது தயாரிப்பு நிறுவனமும் விலகிவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்து அதர்வாவிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

துணிவு படத்தின் முதல் சிங்கிள்

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் துணிவு. போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தில் மஞ்சுவாரியார் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் துணிவு படம் பொங்கல்தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதனிடையே துணிவு படத்தில் முதல் பாடல் வரும் 9-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஊரடங்கை மையமாக வைத்து நயன்தாரா படம்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் கனக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் 15 வயது பெண்ணுக்கு தாயாக நடிக்கும் நயன்தாராவுடன் சத்யராஜ், வினய் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இடைவேளை இல்லாமல் ஓடக்கூடிய படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா ஊரடங்கை மையமாக வைத்து தயாராகியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலுவின் குரலில் கானா பாடல்

காமெடி நடிகர் வடிவேலு நாயகான நடிக்கும நாய் சேகர் ரிட்டனஸ் படம் வரும் 9-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்பத்தா என்ற பாடலுக்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைத்து கொடுத்துள்ளார். இதே படத்தில் நான் டீசன்டான ஆளு என்ற பாடலையும் நடிகர் வடிவேலுவே பாடியுள்ளார்.

தளபதி 67-ல் விஷால் இல்லையா?

வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வில்லன்களாக யார் யார் நடிக்க உள்ளார்கள் என்பது தொடர்பான தகவல் கடந்த சில வாரங்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஷால் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் நடந்த தளபதி 67 பட பூஜையில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றுள்ளார். இதனால் அவர் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறிப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment