பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் வசூல் நிலவரம் குறித்து விநியோகஸ்தர் விளக்கம் அளித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொட்ர்ந்து இயக்குனர் எச்.வினோத் அஜித் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 11-ந் தேதி (நேற்று) வெளியானது. விஜயின் வாரிசு படத்துடன் வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நெகடீவ் ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்பும் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே பொங்கல் வெளியீடாக வந்த வாரிசு படம் துணிவு படத்தை விட அதிகம் வசூலித்துள்ளதாகவும், ஒரே வாரத்தில் வாரிசு படம் 210 கோடி கலக்ஷன் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் வசூல் நிலவரம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.
இதனிடையே துணிவு படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது இதில் வெளிநாடுகளை போல் வெளிப்படையான பாக்ஸ்ஆபீஸ் டிராக்கிங் முறை வர நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதுவரை பாக்ஸ் ஆபீஸ் சாதனை என்பது குறித்து சண்டையிட்டுக்கொள்ள வேண்டாம்.சினிமாவை அதன் தூய்மையான தன்மையுடன ரசியுங்கள். இரண்டு படங்களையும் வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
துணிவு படத்தை விட வாரிசு அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களுக்கு ராகுல் கடந்த ஒரு வாரமாகவே பதில் அளித்து வருகிறார். விநியோகஸ்தர்களுக்கே படத்தின் வசூல் நிலவரம் என்ன என்று தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் தவறான செய்தி உலா வருகிறது என்று பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“