எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியார் பேசிய டைலாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே துணிவு படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு படம் இந்தியாவில் நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியாக துணிவு படத்தின் டிரெய்லரில் பல காட்சிகள் வங்கியில் நடப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சில வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் அஜித் நெகடீவ் வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அவரின் ஸ்டைலிஷான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதே சமயம் டிரெய்லரில் அஜித்தின் மேனரிசம், மற்றும் ஆட்டிடியூட் சாதாரண ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 11-ந் தேதி துணிவு படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து துணிவு படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் ஒருபக்கம் தங்களது ப்ரமோஷன் செய்ய மறுப்பகம் படக்குழுவினர் ப்ரமொஷன் செய்யும் வகையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இதில் படத்தின் நாயகன் அஜித் வழக்கம்போல் ப்ரமோஷனுக்கு மறுத்துவிட்ட நிலையில், இயக்குனர் எச்.வினோத், நடிகை மஞ்சுவாரியார் ஆகியோர் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் எச்.வினோத்துடன் பங்கேற்ற மஞ்சுவாரியாரிடம் படத்தில் வரும் ஒரு டைலாக்கை சொல்லும்படி தொகுப்பாளர் கேட்கிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக எழுந்து வரும் மஞ்சு வாரியார், துப்பாக்கியுடன் வீரமாக நடந்துவந்து அஜித் பேசிய டைலாக்கை பேசுகிறார். பேசி முடித்தவுடன் அனைவரும் சிரிக்க இவரும் சிரித்துவிட்டு பீப் போட்டுவிடுங்கள் என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil