தமிழ் சினிமாவில் 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள டி.எம்.சௌந்திரராஜன், ஒரு பாடலில் ஏதாவது உளற வேண்டும் என்று இசையமைப்பாளர் சொல்ல, அதற்கு வேற்று மொழியில் பாடலை கொடுத்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். சிவாஜிக்கு, அவர் மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியும் பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர், தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்துள்ள, டி.எம்.சௌந்திரரஜன், எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
அதேபோல், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ் என 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள டி.எம்.சௌந்நதிரராஜன், ஒரு படத்தில் பாடல் பாடும்போது, இடையில் ஏதாவது உளற வேண்டும் என்று உளறுகிய மாதிரியும் இருக்க வேண்டும் அதற்குள் ஒரு மொழி அடங்க வேண்டும் என்றும் இசையமைப்பாளர் கூறியுள்ளார். அப்போது அந்த பாடலில் சௌராஷ்டிரா மொழியை கலந்து பாடியதாக டி.எம்.எஸ். குறிப்பிட்டுள்ளார்.
1967-ம் ஆண்டு ஏ.சி திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் அதே கண்கள். ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, வேதா என்பவர் இசையமைத்திருந்தார். படத்திற்காக பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ''பொம்பள ஒருத்தி'' என்ற பாடல் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். டி.எம்.எஸ் - ஏ.எல்.ராகவன் ஆகியோர் இந்த பாடலை பாடியிருந்தனர்.
இந்த பாடலின் இடையில் எதாவது உளற வேண்டும் அதே சமயம் அது ஒரு மொழிக்குள் அடங்க வேண்டும் என்று இசையமைப்பாளர் சொல்ல, டி.எம்.எஸ். தனது சௌராஷ்டிரா மொழியில் ''சொடுச்சா சொடுச்சா'' என்று பாடியிருப்பார். இந்த பாடலை கேட்ட ஏ.வி.எம் செட்டியார், ரொம்ப அருமையாக இருக்கிறது. இந்த பாடலுக்காக படத்தை சௌராஷ்டிரா மக்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் என்று தன்னை பாராட்டியதாகவும் டி.எம்.எஸ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“