Advertisment
Presenting Partner
Desktop GIF

வசூலில் ரஜினிகாந்தின் டாப் 5 படங்கள்: ஜெயிலர் முறியடிக்குமா?

தற்போது 72 வயதாகும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு முன்பு அதிக வசூல் செய்த டாப் 5 படங்களை பார்ப்போம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth

Rajinikanth

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், ஒரு ஆப்’பில் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்னர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணமாக தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது.

தற்போது 72 வயதாகும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு முன்பு அதிக வசூல் செய்த டாப் 5 படங்களை பார்ப்போம்

'2.0'

இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0', 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம், ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் இணைந்து நடித்திருந்தனர்.  '2.0' உலகம் முழுவதும் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் செய்தது. செல்போன் டவர் கதிர்வீச்சின் தீய விளைவுகள் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை படம் எடுத்து காட்டியது.

எந்திரன்

இயக்குனர் ஷங்கரின் 'எந்திரன்' 2010-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களிலும், ஐஸ்வர்யா ராய் பச்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 'எந்திரன்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.290 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உருவ ரோபோவை உருவாக்கும் விஞ்ஞானியின் கதை தான் எந்திரன். இந்த படத்தில் மனித உணர்வுகளை ரோபோவில் புரோகிராம் செய்யும்போது விஷயங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.

கபாலி

ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இணைந்து பணியாற்றிய முதல் படம் கபாலி. இப்படத்தில் வின்ஸ்டன் சாவ், ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா ஆகியோரும் நடித்துள்ளனர். 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் வித்தியாசமான பக்கத்தை காட்டியது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.286 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பேட்ட

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் 'பேட்ட'.  ஒரு அரசியல்வாதியையும் அவனது குண்டர் மகனையும் ஒரு விடுதி காப்பாளர் எப்படி பழிவாங்குகிறார் என்பதே படத்தின் கதை. இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். பேட்ட படம், உலகம் முழுவதும் ரூ 230 கோடி வசூலித்தது. இப்படத்தில் த்ரிஷா, மாளவிகா மோகனன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தர்பார்

ஏஆர் முருகதாஸ், இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் தர்பார். இப்படத்தில் ரஜினிகாந்த் தனது மகளின் மரணத்திற்கு பழிவாங்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், இப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மந்தமான வரவேற்பைப் பெற்றாலும் 'தர்பார்' உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment