சமூகவலைதளங்கள் ஆக்டீவாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தங்களது அஸ்தான நடிகர்கள் குறித்து ஒரு சிறிய தகவல் என்றாலும் ரசிகர்கள் பெரும் வைரலாக பரப்பி வருவது தொடர்ந்து வருகிறது. முன்பெல்லம் ஒரு நடிகரின் படம் வெளியாகும்போது தியேட்டரில் தான் கூட்டம் இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படத்தின் டைட்டில் வைப்பதில் தொடங்கி முதல் பாடல், 2-வது பாடல், டீசர், டிரெய்லர் ஸ்னாப்பீக் என ஒரு படத்தின் ஒவ்வொரு செயலையும் யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
Advertisment
இது போன்ற செயல்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் இந்த பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் தளத்தில் வெளியாகி முதல் நாளில் அதிக வரவேற்பை பெற்ற பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அரபிக்குத்து – பீஸ்ட் (2.2 மில்லியன்)
Advertisment
Advertisements
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அனிருத் இசையில் அமைந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் முதல் பாடலான அரபிக்குத்து தற்போதுவரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
நா ரெடி – லியோ (1.6 மில்லியன்)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 19-ந் தேதி லியோ படம் வெளியாக உள்ள நிலையில், கடந்த ஜூன் 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் நா ரெடி பாடல் வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் வெளியான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜாலியோ ஜிம்கானா – பீஸ்ட் (1.5 மில்லியன்)
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் ஜாலியோ ஜிம்கானா. இந்த பாடல் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தத.
ரஞ்சிதமே ரஞ்சிதமே – வாரிசு (1.5 மில்லியன்)
தெலுங்கு இயக்குனர் வம்பி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் வாரிசு. குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரஞ்சிதமே பாடல் இன்று வரை குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் முனுமுனுக்கக்கூடிய பாடலாக உள்ளது.
தீம் பாடல் – பீஸ்ட் (1.1 மில்லியன்)
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திம் மியூசிக்கும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.