இயக்குனரை அலைய விடுகிறாரா வடிவேலு?
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருநத வடிவேலு சில வரு இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் சரியாக போகாத நிலையில், தற்போது லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் வடிவேலு 11, 11.30 அல்லது 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சில சமயம் பல மணி நேரம் தாமதமாக வருவதாகவும், அவர் வரும்வரை அவரின் போன் சுவிட்ச் ஆஃபில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரின் பல காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷால் நட்பு வட்டாரத்தில் விரிசல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. விஷால் காவல்துறை அதிகாரியாக நடிததிருந்த இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்ற நிலையில். நடிகர்கள் நந்தா ரமணா ஆகியோர் தயாரித்திருந்தனர். மூவரும் நெருங்கிய நண்பகளாக இருந்த நிலையில், லத்தி படத்தின் தோல்வி தற்போது நட்பு வட்டத்தில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு இருக்கும் சம்பள பாக்கியை விஷாலிடம் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பட்டத்தை விரும்பாத விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவில் தற்போது நாயகன், வில்லன், குணச்சித்திரம், கேமியோ உள்ளிட்ட கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருக்கும் நடிகர் விஜய்சேதுபதி, தமிழ் தெலுங்கை தாண்டி தற்போது இந்தியில் நடித்து வரும் விஜய் சேதுபதியை பான் இந்தியா ஸ்டார் என்று அழைக்க தொடங்கியுள்ளனர். ஆனால் தன்னை பான் இந்தியா ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளாராம். நான் எல்லா மொழிகளிலும் நடிக்க விரும்பகிறேன். ஆனால் பான் இந்தியா ஸ்டார் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி வருகிறாராம்.
மும்பையில் வீடு வாங்கிய சமந்தா?
முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ஏற்கனவே ஹைதராபாத்தில் வீடு வாங்கி வசித்து வரும் நிலையில், தற்போது மும்பையில் அவர் வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 3 பிஎச்கே உள்ள அந்த வீடு 15 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியில் நடிக்க திட்டமிட்டுள்ள சமந்தா இந்த புதிய வீட்டை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதையின் நாயகனாக எம்.எஸ்.பாஸ்கர்
தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகரும் டப்பிங் கலைஞருமான எம்.எஸ்.பாஸ்கர் தனது நடிப்பிற்காக பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில். தற்போது அவர் அக்கரன் என்ற படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். அருண் கே.பிரசாத் இயக்கும் இந்த படம் மகளின் சாவுக்கு பழிவாங்கும ஒரு அப்பாவின் கதை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil