Advertisment

ரஜினியுடன் நடித்த முன்னணி நடிகை : கொஞ்சம் நல்ல பாருங்க... யாருனு தெரியுதா?

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Keerthi Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ்

திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது.

Advertisment

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அதிலும் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தேடுவதில் ஆர்வம் காட்டி வரும் நெட்டிசன்களுக்கு கண்டெண்ட் கொடுக்கும் வகையில், சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பப்ளி லக்கில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, விக்ரம் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

Keerthy Suresh

Actress Keerthi Suresh

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த ரஜினிமுருகன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கீர்த்தி சுரேஷ்க்கு பெரிய வெற்றியையும் கொடுத்தது. அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நானிக்கு ஜோடியாக நடித்த தசரா படம் பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது சிரஞ்சீவியுடன் போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் சாணிகாகிதம் படத்தில் சோலோ நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment