கதை முக்கியம் அல்ல; பெரிய நடிகர் இருந்தால் போதும்: முதல் 3 நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்!

கதைதான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை முடிவு செய்யும் என்பது சின்ன பட்ஜெட் படங்களுக்கு பொருத்தமாக இருந்தாலும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அது ஒரு விதி விலக்குதான்.

கதைதான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை முடிவு செய்யும் என்பது சின்ன பட்ஜெட் படங்களுக்கு பொருத்தமாக இருந்தாலும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அது ஒரு விதி விலக்குதான்.

author-image
WebDesk
New Update
VIjay Rajini Ajith

கதைதான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை முடிவு செய்யும் என்பது சின்ன பட்ஜெட் படங்களுக்கு பொருத்தமாக இருந்தாலும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அது ஒரு விதி விலக்குதான். சிறுபட்ஜெட் படங்கள், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாத நாள் பார்த்து ரிலீஸ் செய்தால் தான், அதன் கதையை பொறுத்து வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். ஆனால் ஒரு பெரிய படம் வருகிறது என்றால் சிறு பட்ஜெட் படங்கள், முன்னும் பின்னும் ஒரு வாரம் எந்த படமும் வெளியாகாது.

Advertisment

இதன் காரணமாக சோலோவாக வெளியாகும், பெரிய நடிகர்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், என்றுமே வசூலில் குறை வைப்பதில்லை. அந்த வகையில், தமிழ் சினிமாவில், வெளியான 3 நாட்களில் அதிக வசூலி செய்த படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.

கூலி

Rajinikanth-coolie_f67d0e

இந்த பட்டியலில் முதலிடத்தின் கூலி படம் உள்ளது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம், ரிலீசுக்கு முன்னரே முன்பதிவில் சாதனை படைத்திருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் இப்படம் சுமார் 320 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவிலேயே முதல் 3 நாளில் அதிகம் வசூல் செய்த படமாக கூலி விஜயின் லியோ பட சாதனையை முறியடித்துள்ளது,

லியோ

Advertisment
Advertisements

Leo

கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுவின் முந்தைய படமான லியோ இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் பெரிய மாஸ் காட்டியது. இந்த படம், தியேட்டரில் ரிலீசான இப்படம் முதல் மூன்று நாளில் சுமார் 290 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

கபாலி

Rajinikanth Kabal

இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது ரஜினிகாந்தின் கபாலி. பா.ரஞ்சித் – ரஜினி கூட்டணி முதல்முறையாக இணைந்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இந்த படமும் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மூன்று நாட்களில் சுமார் 217 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது.

குட் பேட் அக்லி

Ajith Good Bad Ugly

முதல் மூன்று நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் குட் பேட் அக்லி திரைப்படம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இந்த படம் அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே எடுகக்ப்பட்டது போல், அனைத்தனை காட்சிகளும் அஜித்தின் ப்ரமோஷன் காட்சிகளாகவே அமைந்தது. இப்படம் மூன்று நாளில் சுமார் 115 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியது.

ராயன்

dhanush rayan

தனது 50-வது படமாக வெளியான ராயன் தானே இயக்கி நடித்த தனுஷ் பிரம்மாண்ட வெற்றியை பெற்றாது என்றுதான் சொல்ல வேண்டும். அதிரடி ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படமாக வெளியான கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக படத்தின் பாடல்கள் ரசிகர்களை துள்ளாட்டம் போடவைத்தது. இப்படம் ரிலீசாகி முதல் மூன்று நாளில் சுமார் 75 கோடிக்க மேல் வசூல் செய்தது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: