குடும்பத்துடன் கீழடியில் நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் மும்பையில் தனியாக வீடு வாங்கிய சூர்யா அங்கு குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனிடையே கீழடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நடிகர் சூர்ய தனது அப்பா அம்மா மனைவி குழந்தைகள் உள்ளிட்டோருடன் பார்வையிட்டுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற பொல்லாதவன் நடிகை
பொல்லாதவன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானர் நடிகை ரம்யா. சினிமா அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது எனது அப்பா இறந்துவிட்டார். அந்த நேரத்தில் நான் அவரரோடு இல்லை. இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அப்போது தற்கொலை செய்ய துணிந்தேன். ராகுல்காந்தி எனக்கு ஆறுதல் கூறினார் தைரியம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
புதிய லுக்கில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் அடுத்தப்பட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில், தற்போது மும்பையில் தனது மகள் சௌந்தர்யாவுடன் புதிய கெட்டப்பில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஆர்யா படத்தின் டீசர்
கேப்டன் பத்திற்கு பிறகு காபி வித் காதல் வசந்த முல்லை ஆகிய படங்களில் கேஸ்ட் ரோலில் நடித்த ஆர்யா, தற்போது முத்தைய இயக்கத்தில் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முத்தையாவின் வழக்கமான பாணியில் வந்துள்ள இந்த டீசரில் அதிகமான சண்டை காட்சிகளே உள்ள நிலையில், ஆர்யா வசனம் குறைவாக உள்ளது. ஆனாலும் இந்த டீசர் வரவேற்பை பெற்று வருகிறது.
சிம்புவை முந்திய நானி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் பத்து தல படம் நேற்று வெளியானது. கன்னடத்தில் வெளியாக மஃப்டி என்ற படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பத்து தல படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதே நாளில் இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியான நானியின் தசரா படம் வசூலில் முந்தியுள்ளது. தசரா உலகம் முழுவதும் முதல் நாளில் 38.40 கோடி வசூலித்துள்ளதாகவும் பத்து தல படம் தமிழகத்தில் மட்டும் 12.3 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil